பக்கம்:மெழுகுச் சிறகுகள்-மரபுக் கவிதைக் கதைகள்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4

வ.கோ. சண்முகம்


அங்கத்தில் அமாவாசை நிறமே எனினும் 'அம்மா வென முகம் நோக்கி அழைத்துக் கூவி பங்கமிலா பெளர்ணமி போல் பால்சு ரக்கும் பசுவதனைப் பூங்கண்ணி எட்டிப் பார்த்தாள் ! தங்கந்தான் நெருப்பஞ்சி அப்பால் போமோ? சிங்கந்தான சிற்றெலிக்கு அஞ்சு மாமோ? சந்தனந்தான் அரைகல்லால் மருளல் உண்டோ? சின மூச்சை அறியாப்பசு கத்த லாச்சு ! வாத்தியமே எதிர்வந்தே அழைத்தாற் போல, மகரயாழ் மேல் மெனதென்றல் நடந்தாற் போல 'பாட்டி' என அழைத்தபடி பேரன் வந்து பழகுகின்ற மழலையதன் பாடம் சொன்னான் ! காத்திருந்தப் பெருவெள்ளம் கடலில் குதித்தக் கணக்காகப் பாட்டியவள் பேரக் குஞ்சைச் சேர்த்தெடுத்து அவனுடலில் நூறுநூறு தேன்முத்தம் பெய்தபடி விசும்ப லானாள் ! பசுவாச்சு சிசுவாச்சு அதன்பின் இந்தப் பழங்கால மனுஷியவள் விழிக்கோ ணத்தின் அசைவினிலே பழக்கடையின் பக்க மாக அவள் காக்கும் மருந்துகளின் பெட்டி யாகப் பசிதாகம் சோர்வகற்றும் பயிர்கள் குடும்பம்! பழுத்தாலும், காய்ந்தாலும் பயனே ஆகும். வசையறியா மா, வாழை தென்னைப் பலாவின் வம்சங்கள் வழிவழியாம் உயிர்த் தொண்டர்கள் !