பக்கம்:மெழுகுச் சிறகுகள்-மரபுக் கவிதைக் கதைகள்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

வ.கோ. சண்முகம்


'இதயபுரத் தலைநகரைச் சுத்தம் செய்ய, எழில்கொஞ்சும் இளமையுடன் வலிமை காட்ட வதிகின்ற மக்களிலே அழகு; இளமை வலுவுள்ள ஆடவர்கள்; பெண்டிர், குழந்தை நிதியுள்ளோர் ஆகி யோரே இருக்க வேண்டும் நலிகிழங்கள், நோயுள்ளோர், வறியோர் எல்லாம் உதயங்கள் ஐந்துக்குள் நகரை விட்டே ஒடிடவே ஒழிந்திடவே வேண்டும்' என்றான் ! அன்புடைய நண்டுக்கால் என்னும் தீவை அண்மையிலேதான் மதாங்கன் தன்வசப் படுத்திக் கொண்டிருந்தான் தரித்திரங்கள், நோய்க் கிழங்கள் கூடாரமாய் அதையாக்கத் தீர்ப்ப வித்தான் ! வண்டுகளும் பாம்புகளும் அந்தத் தீவில் வாய் திறந்த படியிருக்கும் : விஷமே விளைச்சல் நொண்டி முடம் வகையறாக்கள் மெல்ல மெல்ல நொந்தொழிய ரகசியமாய்த் திட்டம் வகுத்தான் ! பூங்கண்ணி ஆத்தாளின் புதல்வ னான புலிநெஞ்சன் வலைநெஞ்சன் வெண்ணை வெட்டி’ பாங்கான உத்தியோகம் ஒன்றி லேஅவன் பசைபோட்டுத் தனைஒட்டிக் கொண்டி ருந்தான்! ஆங்காரம், அதிகாரம், தியாகம் எல்லாம் ஆத்தாளின் சொத்தாக இருந்த நாளில் ஏங்காமல் அவனுக்கே பழைய ஆட்சி இட்டதொரு பிச்சைதான் அந்தப் பணியாம் !