பக்கம்:மெழுகுச் சிறகுகள்-மரபுக் கவிதைக் கதைகள்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8

வ.கோ. சண்முகம்


பொற்குயிலி புலிநெஞ்சன் மனைவி நல்ல புத்தியுள பெண்ணேதான்! தன்ம ணாளன் நெற்குதிரின் உள்ளிருக்கும் எலியைப் போல நீசனாகி விட்டதிலே மாளாத் துயரம் ! 'கற்கண்டே மலர்ச்செண்டே கோபிக்காதே ! காலத்தின் மின்னவெது?" அதிர்ஷடம் தானே! விற்கணைபோல் 'அது' வந்தே நமது வீட்டின் விட்டத்தில் குந்துதடி, விட்டி டாதே ! 'அரண்மனையில் புதுப்பதவி எனக்கே கிடைக்கும் ! அட்டிகையும் ஒட்டியாணமும் உனக்கே கிடைக்கும் ! முரண்பட்டுக் கிழவியிடம் உளறி டாதே ! மோசம் வரும் !" என்றெல்லாம் நைப்பு காட்டி உரம்பெற்ற அவள்மனத்தை ஊமையாக்கி ஒத்தாசை செய்வதற்கும் பழக்கிவிட்டாள் ! 'வரம்கொடுக்கும் குலதெய்வம்’ என்றே அவனும் வந்தபுது கொடுங்கோலனை வாழ்த்த லானாள் ! முதலையிடம் கண்ணிர்க்கா பஞ்சம் உண்டு? முன்வந்து பின்சுற்றி அன்னை தன்னை எதுஎதுவோ உணர்த்திட்டே வணங்க லானான் ! “எப்படிநான் அம்மா உனைப்பிரிவேன் ? என்றான் 'கதறிஇனி தடுக்கஇனி என்ன உண்டு? காலத்தைத் தாழ்த்தாமல் கிளம்பு!" என்றான் விதி தனக்கே வேலியிட லாமா?" என்றே வேதாந்தக் கூச்சல்களை அவிழ்த்து விட்டான்!