பக்கம்:மெழுகுச் சிறகுகள்-மரபுக் கவிதைக் கதைகள்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12

வ.கோ. சண்முகம்


பிடித்தவனை என்பின்னே இழுத்து வருவீர்! பெப்பே' என நமை இவனே ஏமாற்றிவிட்டான்! இடித்ததுபோல் ஆணையதை உதிர்த்த மதாங்கன், எவரையுமே நம்பாமல் தானே குதிரைப் பிடித்ததிலே அமர்ந்திட்டான் அன்னம் தன்னைப் பின்அமர்த்தி, நகர்எல்லை நோக்கிப் பறந்தான்! கடிபட்டால் தடிக்காதா? புலிநெஞ் சன்தன் கைகளிலே விலங்கேற்றி இழுத்துப் போனார்! அரும்புக்குள் சிறையிருந்த நறும ணந்தான் ஆனந்நத சுதந்திரத்தைப் பெற்றுக் கிளம்பித் திரும்புகின்ற திசைஎங்கும் உலவுகின்ற செவ்வந்தி வேளையது! பணிமு டித்துப் பெரும்புவியின் வாழ்த்துக் களைப் பெற்றுக் கொண்டே பீடுடனே பரிதியவன் மேற்கே போனான்! விரும்பாத விபரீத யாத்தி ரைக்கே விதித்திருந்த கெடுவதுவும் முடிந்து போச்சு! நண்டுக்கால் தீவடையப் பயணம் செய்யும் நாலைந்து முதியோருடன் தானும் சேர்ந்து கொண்டவுடன், பூங்கண்ணி மீண்டும் மீண்டும் கும்பிட்டே இதயபுரம் தன்னை வாழ்த்தி; "ஒண்டவந்த பிடாரியதே ஊர்ப்பி டாரியை ஒடென்றே விரட்டியதாய்க் கதைகள் சொல்வார் கண்டுவிட் டோம் நாமின்று அனுப வத்தில் காலத்தின் கொடுமையிது ' என கலங் கிட்டாள்.