பக்கம்:மெழுகுச் சிறகுகள்-மரபுக் கவிதைக் கதைகள்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மெழுகுச் சிறகுகள் 15 முடிச்சுக்குள் இருப்பதெது என்பதையே முன்பேயே அறிந்திடாமல் போன தற்குத் துடித்தபடி குறுகுறுக்கும் தன்னுள் ளத்தின் சுடுநெருப்பில் புலிநெஞ்சன் சிக்கிக் கொண்டு அடுத்தபடி நடப்பதே தோ எனப்ப யந்தே அடித்தசிலைக் கல்லாகக் குனிந்து நின்றான் ! “எடுத்ததுதான் எடுத்தாளே, என்னி டத்தில் ஏதேனும் சொன்னாளா?' எனக்கு மைந்தான். கண் இமைக்கும் நேரத்தில் மதாங்கன் தனது கட்டாரியால் கிழவியையே குத்தி விட்டான் ! புண்வாயில் பொங்குகின்றக் குருதி தன்னில் புரண்டிட்டப் பைச்சுமையைப் பிடுங்கி எடுத்தே பெண்பாவிப் பொன் அன்னம் கையில் தந்தான் ! பேய்மகளும் ஆவலுடன் வாங்கிப் பிரித்தாள் ! மண் மண் மண்! அவ்வளவும் புழுதிமண்ணே ! மற்றபடி வெறெதுவும் பைக்குள் இல்லை ! ஏமாற்றம், அவமானம் நெருப்பாய்த் தீய்க்க 'ஏய் ஆத்தா எங்கேயடி அந்தந கைதான்? பேமாத்து வேலையெலாம் செய்தாயோ உன் பிள்யவனுக்குடனேயே கிரேச்சே தம்தான்! சாமான்தான் உன்பாட்டன் சொத்தா? இல்லை, சந்தைக்கருவாடா? ராஜாங்கத்தின் சீமான்கள் விவகார்ம் ! உனக்கேன் வம்பு? சீக்கிரமே சொல்லித்தொலை!' என்றாள் அன்னம்,