பக்கம்:மெழுகுச் சிறகுகள்-மரபுக் கவிதைக் கதைகள்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16

வ.கோ. சண்முகம்


தாயருகே பதைபதைத்தே ஓடிவந்த தனயனவள் துலாச்சின்னம் பற்றிக் கேட்டான்! வாயருகே வழிந்தோடும் ரத்தம் துடைத்தே “வழிவழியாய் என்குலத்தைத் தோற்றுவித்தத் தாய்மண்ணை: என்மூச்சை; வாழ்வை வளத்தைத் தந்திட்டப் பொன்னமண்ணைப் புனித மன்னை ஆய்ந்ததெடுத்தே கொண்டுவந்தேன் உயிருக் குயிராய் அதனையே நான்துதித்தேன்! மதித்தும் வந்தேன்! பிறப்பெடுத்தே; உடல்வளர்த்தே; இன்ப துன்பப் பின்னல்களால் என்வாழ்வை நெய்து காத்தும் அறப்பணிக்கே எனைக் கொடுத்த இந்த மண்ணின் அணு அணுவாம் து சிகளே எனது மூச்சு! இறப்பெனினும் தாய்நாட்டு மண்ணின் மேலே இழுத்துவிடும் மூச்சதுதான் நிற்க வேண்டும்! சிறப்பென்றும் வேறுண்டோ? அடிமையாகச் செத்துவிழ என்மனந்தான் ஒப்ப வில்லை !” 'அதனாலே தீவுக்கும் இந்த மண்ணை அரும் பொருளாய்ச் சுமந்து போகினிறேனர் நான! இதமான தலையணையாய் இந்த மண்ணை எங்கே நான் சென்றாலும் வைத்துத் தூங்கி என்றேனும் அதன்மேலே சாகவேண்டும் ! ஆசையெலாம் இவ்வளவே ! ஆனால், ஐயோ! புதிதாகப் புதிராக நகைத்தி ருட்டில் புகுத்தி எனை இங்கேயே கொன்று விட்டாய்...!"