பக்கம்:மெழுகுச் சிறகுகள்-மரபுக் கவிதைக் கதைகள்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18

வ.கோ. சண்முகம்

18 வ. கோ. சணி முகம் தன் புரட்டுத் தன்திருட்டுத் தாயைக் கொன்று: தாரத்தைப், பிள்ளையினைச் சீர ழித்த வன்கொடுமை தாளாத புலிநெஞ் சன்தான் வாளெடுத்தே தன்மார்பில் பாய்ச்சிக் கொண்டான்! மின்வெட்டும் நேரத்தில் மதாங்க னுக்கே மிகப்பெரிய ஞானோதயம் தோன்றத் துடித்தான்! தன்மட்டில் பரிகாரம் தேடி, ஆத்தாள் தந்திட்டப் புதுப்பாடம் கற்றுக் கொண்டான்! தேசத்தின் மண்ணதனை உயிருக்குயிராய்த் தெய்வம் போல் துதித்துப்போற்றிகாத்த அந்தப் பாசத்தின் பேரொளியை வணங்கி வாழ்த்திப் பணிந்திட்டான் ! குவிந்திட்டான் குனியாத் தலையை வாசத்துப்பூ மொட்டாய் அவள்வம் சத்தின் வரிசைக்குப் புதுமுளையாய் இருந்த பேரன் ஆசைக்கனி தனைவாரி அணைத்தான்! மக்கள் அரசு'க்கே இனித்தலைவன் நீயே என்றான்! நெடுநாளின் பாவமெல்லாம் கரைவ தேபோல்; நெஞ்சிருந்த நஞ்செல்லால் வடிவ தேபோல், கடகடவெனக் கண்ணிரை உகுத்தான்! அன்பு கருணை, அறம், மனிதாபி மானம்எல்லாம் தடதடவென மதாங்கனுக்குள் பாயஉடனே, தன்கொடியைக் கீழிறக்க ஆணை இட்டான்! படைகளையும் தன்நாடு திரும்பச் செய்தான்! பழங்கொடியே புதுக்கொடியாய் பறந்த தாங்கே!