பக்கம்:மெழுகுச் சிறகுகள்-மரபுக் கவிதைக் கதைகள்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

வ.கோ. சண்முகம்


இத்தனைபெரும் தோல்விகட்கும் இழப்புக்கும் இன்னல்கட்கும் மொத்தமாய், ஏகமாய், மூலகாரணமாய் ஆன சத்துருதான் ஒன்றே. இதுதான் சாகஸி வடிவில் வந்தே புத்தியைக் குடித்த சைத்தான் புதுமதுதான் என்றே கண்டான்! கடைசியாய் அமர சிங்கின் கையில்தான் மோதிரம் தனைக்கொடுத்தே படைகளும் தானும்பெற்ற மதுநிறை சாகஸியை கடகடவெனவே கீழே சாய்த்தே காலாலே உருட்டித் தள்ளி அடலேறாய் முழங்கினான். 'ஆண்டவனே பொறுப்பாய்' என்றான் "இக்கணம்முதல் நான்தான் மதுவை ஏறெடுத்தும் பாரேன்! சக்தியைப் புத்தியைக்கொல்லும் சைத்தானைச் சாராயத்தை மக்களும் நெருங்கிடாமல் மனதார வெறுத்தொதுக்கக் தக்கதெலாம் செய்வேன்; உய்வேன்; சத்தியம்!” என்றான் பாபர்.