பக்கம்:மெழுகுச் சிறகுகள்-மரபுக் கவிதைக் கதைகள்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 மெழுகுச் சிறகுகள் 33 அந்தநாள் பார தத்தின் அற்புதத் துறவி களுக்குள் விந்தையாம் செயல்கள் மிக்கார் மெய்ஞானி , யோக வீரர்; சித்தாந்த புகழில் மிகுந்த சித்தாராம் தண்டா மிஸ்ஸை அந்தரங்கமாய் சந்திப் பதற்கே அலெக்ஸாண்டர் ஆசை கொண்டான்! சேனைகளை நடத்து கின்ற தீரர்களில் தலைசி றந்தோன் யானையைக் கூடத் திருடி இருட்டுப்பூ னையாய் ஆக்கிப் பானைக்குள் தள்ளு கின்றப் பக்குவ அறிவு நிறைந்தோன் ஒனஸிக் ரேட்டஸ் தன்னை உடனழைத்துச் சொல்லப் போனான். “நண்பனேகேள்! அன்றோர் காலை நம் முகாமில் சிகிச்சை செய்ய கண் ஒன்றில்லா குட்டி யோகி கைதியாய் வந்தான் அன்றோ? மண்கட்டியை வைத்துக் கொண்டு மகாஜாலம் செய்திட் டானே ! புண்ணாற்றும் பச்சி லையின் பூடகம் சொன்னான் அன்றோ?