பக்கம்:மெழுகுச் சிறகுகள்-மரபுக் கவிதைக் கதைகள்.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19 மெழுகுச் சிறகுகள் 35 வெகுதொலைவில் காட்டின் நிழலில் வேங்கையது இடது பக்கமும் வெகுசாதுவாம் மானின் குட்டி வலதுபக் கமுமாய்க் கொஞ்சத் தகத்தகாய ஒளிமு கத்தில் சாந்தமய விழிகள் மின்ன முகிழ்த்திட்டப் புன்னகை யோடே முனிவரையே கண்டான் ரேட்டஸ் வேந்தனாம் அலெக்ஸாண்டர் பற்றி வினயமாய் எடுத்து ரைத்தான் : 'ஏந்தலே! ஞான சித்தா! அனைத்துமே அறிந்தோர் தாங்கள்! வேந்தர்களின் வேந்தன் யுத்த iரத்தின் பராக்கிர மத்தின் காந்தத்தின் பெயரே எங்கள் காவலன் அலெக்ஸாண்டர் காண்பீர்! தன்சுட்டு விரலின் அசைவில் தரணியையே ஆளு கின்ற மன்னன்தான் உமையே காண மனத்திலோர் ஆசை கொண்டான்! பொன்மகளே அவன்வடி வத்தில் பூமாலை சூட்டு தற்குத் தன்கரம் நீட்டு கின்றாள் தயங்காதீர்! புறப்படும் 'என்றான்.