பக்கம்:மெழுகுச் சிறகுகள்-மரபுக் கவிதைக் கதைகள்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

வ.கோ. சண்முகம்


'யாரடா மன்னன்? உண்மை இன்னுமா விளங்க வில்லை? நீரதாய். நெருப்பாய்க் காற்றாய் நிலமண்ணாய்ப் புனலே யாகப் பரந்துள்ள அரசாங் கத்தின் பேரரசன் ஒருவ னேதான், அவன்பெயர்தான் கடவுள் ஆகும் ! தீயதோர் சுயந லத்தால் திமிரினால் ஆண வத்தால் பேயாக மாறி ரத்தப் பிரளயமே நடத்து கின்ற காயான நெஞ்சுக் காரன் அலெக்ஸாண்டர் வாழ்வு பற்றி மடையனுக்கே ஞானம் இல்லை உன்போன்ற ஆசாமி கட்கே அலெக்ஸாண்டர் உலக மன்னன்!’ பொன்னாசை, மண்ணைப் பெருக்கும் பொல்லாத நெருப்பு; எண்ணெய் மின்போன்ற கொடி யிடையாள் மேனியிலே காம விருந்து தின்கின்ற அழுக்கு ஆசை சேர்ந்தவனா தேவ மைந்தன்?