பக்கம்:மெழுகுச் சிறகுகள்-மரபுக் கவிதைக் கதைகள்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44

வ.கோ. சண்முகம்


சரிசரி இனிநிற் காதே! சக்கர வர்த்தி உன்னை சரியாசனம் கொள்ளச் செய்ய தந்திட்ட இலச்சி னையை வரும்வழியில் ஆற்றின் வெள்ள வாய்க்குள்ளே இழந்தாய் அன்றோ? தகுதிமேல் அதனை இங்கே தரித்துக்கொள் போய்வா!' என்றார். தண்டாமஸ் கடைசியாய் சொன்னதும், தங்கமுத் திரையைத் தந்ததும் கண்டிட்ட ஒனஸிக் ரேட்டஸ் கலகலத்துத் திகைத்துப் போனான்! தண்டனிட் டேமுனி வனான கோவனாண்டி சாதுவை வணங்கிச் சண்டைமுகாம் திசையை நோக்கிச் - சடுதியில் மறைந்து போனான்!