பக்கம்:மெழுகுச் சிறகுகள்-மரபுக் கவிதைக் கதைகள்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48

வ.கோ. சண்முகம்

48 வ.கோ. சணி முகம் நாரதனின் தெய்வீக விழிகளுக்குள் நரமனிதன் கபாலத்தில் வளர்ந்தி ருந்த பேரதிசயத் துணுக்கொன்று மின்ன லாச்சு! பிரம்மலிபி! விதிநியதிக் கதைச் சுருக்கம்! புதுப்பொம்மை தளைக்காணும் குழந்தை போலப் பொங்கிற்று வியப்பார்வம் முனிவ னுக்கே! கொதிப்படங்கித் தனைமறந்து அக்கபா லத்தில் குறித்திருந்த செய்திகளைப் படிக்க லானான்! 'நெருப்பைப்போல் சுடுகின்ற நீங்கா வறுமை நிரம்பியதோர் குடும்பத்தில் இவன்பி றப்பான்! பருப்புக்கும் அரிசிக்கும் கதியேஇன்றிப் பகல்திருட்டு நிபுணனெனப் பெயரெ டுப்பான்! அஷ்டமத்துச் சனியுடனே ஆறில் வியாழன் ஆள்கையிலே இவன்கைகள் விலங்கைப் பூணும்! துஷ்ட னெனப் பத்தாண்டு சிறையின் வாசம் துரைத்தனத்தார் இவனுக்கே கொடுத்து வைப்பார்!