பக்கம்:மெழுகுச் சிறகுகள்-மரபுக் கவிதைக் கதைகள்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50

வ.கோ. சண்முகம்


தனக்குற்றே பலமாக நகைத்துக் கொண்டான்! தலைஎழுத்தை எழுதுகின்ற பிரம்ம தேவன் தனக்கின்றுத் தலைவணங்கிக் குனியப்போகும் சம்பவத்தைக் கற்பனையால் நெய்தே களித்தான்! அடுத்தசில வினாடிக்குள் பிரம்ம லோகம் அடைந்திட்ட நாரதன்தான் அட்ட காச இடிச்சிரிப்புச் சிரித்திட்டான்! பிரம்ம தேவன்! எதிர்வைத்தான் கபாலத்தை மேலும் சிரித்தான்! எப்போதும் பிரம்மனிடம் நார தனுக்கே எதிர்வாதம் செய்வதிலோர்கொள்ளை ஆசை தப்பேதும் நான்முகன்தான் தவறி செய்யும் தருணமதும் வராதாஎன ஏங்கி நின்றான்! நான்முகனின் கையெழுத்தை தலையெழுத்தாய் நரர்களுக்கே விதிசமைக்கும் சிருஷ்டித் தொழிலின் பான்மையினை நாரதன்தான் கொஞ்ச மேனும் பாராட்டும் வழக்கமிலை வெறுத்தும் வந்தான்!