பக்கம்:மெழுகுச் சிறகுகள்-மரபுக் கவிதைக் கதைகள்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27 மெழுகுச் சிறகுகள் 51 நாரதனின் உள்எண்ணம் பிரம்ம னுக்கும் நன்றாகத் தெரிந்ததுதான்! இதனால் எல்லாம் பாருலக மாந்தர்களின் விதியை வரையும் பணிபுரிய நான்முகன்தான் தயங்குவானா? தோற்றாயா? நான்முகனே? லட்சம்கோடித் தொடர்கின்ற தொகைகளிலே நரர்களுக்கே ஏற்றதொரு தலைஎழுத்தை வரைவ தாக இறுமாப்புக் கொண்டாயே? இங்கே பாராய்? இம்மண்டை ஒட்டினிலே நீதான் வரைந்த யோகத்தின் இலட்சணத்தை பிறவி முடிந்தும் இம்மானுடன் தனக்குமொரு பேறுகிட்டும் என்றென்றே கிறுக்கிவைத்தாய்? உண்மைதானா? எத்தனையோ வருஷங்கள் ஒடிப் போக இம்மண்டை ஒடதுதான் காண்பார் இன்றி நத்தாக தீண்டாத வஸ்துவாக நாறிப்போய்க் கிடப்பதுதான் யோகம் போலும்!