பக்கம்:மெழுகுச் சிறகுகள்-மரபுக் கவிதைக் கதைகள்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#0 மெழுகுச் சிறகுகள் 57 அதிருஷ்டம் வந்தே கொஞ்சிக் குலாவுதல் தர்மத் தாய்க்குச் சகிக்கவே இல்லை! அதனைச் சுட்டி அக்கினி சொற்களால் அதிருஷ்ட தேவியை கண்டிக்க லானாள்! அதிருஷ்டமோ சிறிதும் அசரவே இல்லை! கோபமோ வெறுப்போ கொள்ளவே இல்லை! சிலம்பெனச் சிரித்தான்! தேனின் சாரலாய்ச் சொற்களைத் தூவினான்: 'அக்கா அக்கா! தர்ம தேவி! நீயோர் அசடு! நீதியும் நியதியும் உளது நேத்திரங்கள்! சாகாத சத்தியம் என்பது ஒன்றே உனது ஜோதி! இதய மாகும்