பக்கம்:மெழுகுச் சிறகுகள்-மரபுக் கவிதைக் கதைகள்.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58

வ.கோ. சண்முகம்


காலமும், ஒழுங்கும் உனது கைகள்! உனது ரத்தமோ ஒழுக்க சீலம்! கருணை, அன்பு காருண்ய மெல்லாம் உனது மேனியின் நாடி நரம்புகள்! ஈஸ்வர நினைவே என்றும்நீ உண்ணும் ஒரேஒரு உணவு! 'கொடுப்பது என்பதே உனது வாழ்வு! 'எடுப்பது' என்பதை அறியவே மாட்டாய்! இதனா லன்றோ உன்னைப் பற்றி ஒசையே இல்லை' 'இருக்கிறாய்நீ என்பதை எங்கோ, யாரோ சிலபேர் அறிவார்! அப்படி அறிந்த 'அந்தச் சிலரும்' தத்துவம் பேசும்