பக்கம்:மேகமண்டலம்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டை வண்டிக் குப்பன்

4.

ஈது பொய்யிலை; மாலை வேளையில்

இரண்டு காளைக்கும் தவிடுவைத் தோதும் அன்பினில் முதுகு தடவியே

உற்ற பாரங்கொள் வண்டியில் தீதி லாவகை பூட்டி ஒட்டுவன்;

செறிஇ ருட்டினிற் சாலையில் ஏதும் அச்சமின் ருத லின்வண்டி

இழுத்துச் செல்லும்அக் காளைகள்.

5

வண்டிக் கீழொரு விளக்குத் தொங்கும்;அம் மங்க லான வெளிச்சமே . கொண்டு சாலையிற் போகும் காளைகள்; குப்பன் தூங்குவன். மாடுகள் மிண்டு செய்வதும் சாட்டை முறிவதும் வினவின் அவன்அறி யாதன. தொண்டு செய்வதிந் நெறியில் உற்றிடின்

துயர மேதுல கத்திலே ?

49

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேகமண்டலம்.pdf/58&oldid=620570" இலிருந்து மீள்விக்கப்பட்டது