பக்கம்:மேகமண்டலம்.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மு. க வு ைர

பள்ளிக்கூடத்தில் வாசித்துக்கொண்டிருந்த போதே எனக்குக் கவி எழுத வேண்டும் என்ற ஆசை முளைத்தது. கவியின் இலக்கண்ம் தெரி யாததற்கு முன்பே கவியின் ஓசை ஒருவாறு மனசுக்குத் தட்டுப்பட்டது. ஸ்வர ஞானம் உண்டாவதற்கு முன்பு இசைஞானமும் ராகஞானமும் உண்டாவது எப்படி இயல்போ, அதுபோல இதுவும் இயல்புதான். என்னு டைய பன்னிரண்டாவது வயசில் இந்த ஆசை முளையிட்டது. நாளாக நாளாக அது வளர்ந்தது.

ஆசைப்படுவதற்கு எல்லோருக்கும் உரிமை உண்டு, ஆனால் ஆசை நிறைவேறுவது எத்தனையோ காரணங்களைப் பொறுத்தது. சின்னப் பிராயத்திலே கிராமத்தில் வாழ்ந்த போதெல்லாம் மனம் லேசாகக் காற்ருேடு பறந்து, காவிரியோடு துளைந்து, மலரோடு மகிழ்ந்து உலாவியது. அக்காலத்தில் எத் தனையோ பிஞ்சுக் கற்பனைகள் முளைத்தன. சுதந்தர தேவியைப்பற்றிப் பல பல பாடினேன். அக்காலத்துப் பத்திரிகைகளில் அவ்ை வெளி வந்தன. அவற்றைப் பாதுகாத்து வைக்காமை யால் இப்போது அவை கிடைக்கவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேகமண்டலம்.pdf/6&oldid=620466" இலிருந்து மீள்விக்கப்பட்டது