பக்கம்:மேனகா 1.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கும்பிடும் கள்ளன்

83

மெத்தை முதலியவற்றின் சுகத்தைப் பற்றியும் அந்தரங்க அன்போடு கேட்பார். தினம் ஒவ்வொரு பூமாலை கொண்டு போய் அம்மாளின் நாய்க்குச் சாத்தி, அதன் நற்குணம், மேன்மைகுணம் முதலியவற்றைப் பற்றி அம்மாளுக்கு முன் ஒரு அத்தியாயம் திருப்புகழ் படிப்பார். அதன் உடம்பில் ஒடும் சீலைப் பேனை எடுத்து நசுக்குவார். அவற்றைக் கண்ட துரைசானி பெருமகிழ்ச்சியும் புன்னகையும் கொள்வாள். அதை எவருக்கும் கிடைக்காப் பெரும் பாக்கியமாக மதிப்பார் தாந்தோனியார். பங்களாவில் எத்தகைய தேவையும் உண்டாகாமல் தாசில்தார் பார்த்துக்கொள்வார். அவர்மீது துரை, துரைசானி ஆகிய இருவருக்கும் பட்சம் பெருகி வந்தது.

அவர் பங்களாவிற்கு வரும்போதெல்லாம் எதை மறக்கினும் தமது பகைவரான சாம்பசிவஐயங்காரை மாத்திரம் மறவாதிருந்தார். அவரைப் பற்றிப் பெரிய கலெக்டர் மனதில் கெட்ட அபிப்பிராயத்தையும், அருவருப்பையும், பகைமையும் உண்டாக்கி வந்தார்.

வராகசாமி தனது மனைவி மேனகா காணாமற் போனதைப்பற்றித் தஞ்சையில் தன் மாமனாருக்குத் தந்தியனுப்பிய தினம் காலையில் பெரிய கலெக்டர், சென்னை கவர்னருக்கு ஒரு முக்கியமான விஷயத்தில் அர்ஜி தயாரித்து அனுப்பவேண்டி யிருந்தது. அதில் தமக்குப் பக்கத்துணையா யிருக்கும் பொருட்டு கலெக்டர், தாந்தோனியாரையும், சாம்பசிவத்தையும் காலை ஒன்பது மணிக்கே வரும்படி கண்டிப்பாய் உத்தரவு செய்திருந்தார். தாந்தோ னிராயர் தகப்பனுடைய திதியை விடுத்தாலும் விடுப்பார். பெரிய துரையின் உத்தரவை மீறவே மாட்டார். அவர் விடியற்காலம் ஐந்து மணிக்கே வீட்டைவிட்டுப் புறப்பட்டார். வழக்கப்படி முதலில் அம்பாளின் சன்னிதிக்கு வந்தார். அவள் எழுந்திருக்க வில்லை. அங்கிருந்த நாய், ஆடுகள் முதலியவற்றைத் தடவிக்கொடுத்த பிறகு, சுவாமி சன்னிதிக்குச் சென்றார். தாழ்வாரத்தின் பக்கத்தில் சார்புப் பந்தலிருந்தது, அதில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/101&oldid=1249179" இலிருந்து மீள்விக்கப்பட்டது