பக்கம்:மேனகா 1.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கும்பிடும் கள்ளன்

85

அச்சத்தையும், திகைப்பையுங் கொண்டார். தேத்தண்ணிர் அளவு கடந்து தித்திப்பாயிருந்ததால், துரை தம்மை பொட்லரென நினைத்து அவ்வாறு செய்தாரென்று ஒருவாறு யூகித்தார். சிறிது துணிந்து, “துரைகளே! காலை வந்தனம். நான் தாசில்தார் என்மேல் தேத்தண்ணீர் படவில்லை” என்றார் ராயர். தாசில்தாருடைய குரலை உணர்ந்த துரை திடுக்கிட்டுக் கண்களைத் திறந்து பார்த்தார். உடனே விரைந்தெழுந்து மிகுந்த விசனத்தோடு, “தாசில்தாரே! மன்னிக்கவேண்டும், பொட்லரென்று நினைத்து இப்படி செய்துவிட்டேன். திரும்பவும் உம்முடைய மன்னிப்பைக் கேட்கிறேன்” என்றார். அங்கிருந்த தண்ணீர் பாத்திரம், துவாலை, சோப் முதலியவற்றைக் கொணர்ந்து தாசில்தாருடைய முகத்தைச்சுத்தி செய்ய முயன்றார். தாம் அறியாமல் செய்ததை மன்னிக்க வேண்டு மென்று மென்மேலும் கூறி மனதார வருந்தினார். “அதிகம் படவில்லை; பாதமில்லை; நானே துடைத்துக் கொண்டேன்.துரையவர்கள் இதைப்பற்றி வருந்த வேண்டாம்” என்று தாசில்தாரும் தாண்டவமாடினார். அவர் மீது பெரிதும் இரக்கமும், அன்புங்கொண்ட துரை, அவர் கேட்கும் வரத்தைக் கொடுக்கத் தயாராக இருந்தார். அந்தக் குறிப்பையறிந்த தாந்தோனியார் தமக்கு ஒவ்வொரு நாளும் அவ்விதம் பூஜை கிடைக்க வேண்டுமென்று ஈஸ்வரனை வேண்டினார்.

அரை நாழிகைக்குப் பிறகு அவ்விருவரும் தாம் எழுதக் கருதிய அர்ஜியைத் தயாரிக்க உட்கார்ந்தனர். அப்பொழுதும் சாம்பசிவம் வரவில்லை. மணி பத்தாயிற்று; துரை பொறுத்துப் பொறுத்துப்பார்த்தார். “தாசில்தாரே! ஏன் டிப்டி கலெக்டர் வரவில்லை? இது அவசரமான காரியமென்று நான் எவ்வளவு வற்புறுத்திக் கூறி தவறாமல் ஒன்பது மணிக்கே வரச் சொன்னேன். அவர் கொஞ்சமும் மதிக்க வில்லையே” என்றார் துரை.

தாசில்:- தங்களுடைய உத்தரவே இம்மாதிரியானால், எங்களுடைய கதியைப்பற்றித் துரையவர்களே யோசிக்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/103&oldid=1249187" இலிருந்து மீள்விக்கப்பட்டது