பக்கம்:மேனகா 1.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காணாமற் போனாயோ கண்மணியே?

95

குடுமியை நீக்கி முன்மயிர் வளர்த்து அதை இரண்டாய் வகிர்ந்து விட்டிருந்தான். அவனுடைய நெற்றியில் சாந்துத் திலகமும், வாயிற் புகையிலை அடக்கியதால் உண்டான கன்னப் புடைப்பும் எப்போதும் குன்றின் மேல் விளக்காயிருந்து அவன் முகத்திற்கு அழகு செய்து கொண்டிருந்தன. அவன் கல்வி கற்கும் பொருட்டுப் பள்ளிக்கூடத்திற்குப் பல வருஷங்கள் சென்று புகையிலை போடுதல், பொடி போடுதல் முதலிய இரண்டு பரிட்சைகளிலும் முதல் வகுப்பில் தேறிவந்தான். அவனுடைய தந்தை சொற்பமான நிலத்தின் வருமானத்தில் ஜீவனம் செய்துவந்தவர். புத்திரன் கல்வி கற்கச்சென்றவன் ஆதலால் நிலச்சாகுபடி செய்தலைக் கற்கவில்லை. நிலச்சாகுபடி செய்தலும் இழுக்கான தொழிலென அவன் மதித்தான். குமாஸ்தா, கணக்குப் பிள்ளை முதலிய உத்தியோகம் அவருடைய பெருமைக்குக் குறைவானது. அவற்றிலும் பெரிய உத்தியோகங்களைச் செய்யத் தேவையான உயர்ந்த பரிட்சைகளில் அவன் தேறவில்லை. ஆகையால், அவனுக்குத் தகுந்த உத்தியோகம் உலகத்தில் ஒன்றுமில்லை. இத்தகை யோருக்கு சாம்பசிவத்தைப் போன்ற மனிதர் வீட்டில் வந்திருந்து அதிகாரம் செய்து சாப்பிடுதலே உத்தியோகம். அவனுடைய கெட்ட பழக்க வழக்கங்களைக் கண்டு அவனுடைய தந்தையும் அவனை அடிக்கடி கண்டித்தார். தவிர, அவனுக்குத் தேவையான காப்பியும் பலகாரங்களும் வேளைக்கு வேளை அங்கு கிடைக்கவில்லை. ஆகையால், சாம்பசிவத்தின் வீட்டில் சர்வாதிகாரியா யிருத்தல் அவனுக்குப் பரமபதமாய் இருந்தது. அவன் தனது தகப்பன் வீட்டில் சோற்றுக்கு மல்லுக்கட்டினான். அக்காள் வீட்டிலோ இடுப்பிற்கு மல்லுக் கட்டினான். உடம்பில் பிளானல் ஷர்ட், தோளில் பட்டு உருமாலை, தலையில் மகம்மதியர் தரிக்கும் நீண்ட அரபிக் குல்லா, கையில் வெள்ளி முகப்பு வைத்த சிறிய பிரம்பு முதலியவைகளே அவன் மனதிற்கு உகந்த ஆடையா பரணங்கள். இத்தகைய அலங்காரத்தோடு அவன் வெளிப்படுவானாயின், பன்னிரண்டு நாமங்கள் தரித்த வைதிகரான அவனுடைய தந்தை அவன் தமது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/113&oldid=1249519" இலிருந்து மீள்விக்கப்பட்டது