பக்கம்:மேனகா 1.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


மேனகா

1-வது அதிகாரம்


சாம்பசிவ ஐயங்கார்


பு
த்தியில்லாதவனுக்குச் சுகமில்லை; என்ன செய்கிறது குட்டிச் சுவரைப்போல வயதான ஒரு கிழம் சொல்லுகிறதே, அதைக்கேட்கவேண்டுமே என்கிற மதிப்பு கொஞ்சமாவது இருந்தால் இந்த கஷ்டமெல்லாம் ஏன் உண்டாகிறது?” என்று எள்ளும் கொள்ளும் வெடிக்கத் தகுந்த கடுகடுத்த முகத்தோடு கனகம்மாள் தனக்குத்தானே மொழிந்து கொண்டு சமையலறையிலிருந்து கூடத்து அறைக்குச் சென்றாள்.

கூடத்தில் போடப்பட்டிருந்த சாய்மான நாற்காலியில் சாய்ந்து தமக்கெதிரில் இருந்த சிறிய மேஜையின் மீது கால்களை நீட்டி விட்டிருந்த டிப்டி கலெக்டர் சாம்பசிவ ஐயங்கார் தமது இடக்கரத்தால் நெற்றியைப் புதைத்துக் கண்களை மூடியவண்ணம் அசைவற்றிருந்தார். அவருடைய அன்னை கனகம்மாள் அப்போதைக் கப்போது கொடுத்த கூர்மையான சொல்லம்புகள் அவருடைய செவிகளுக்குள் நுழைந்து துளைத்தனவாயினும் அவர் உணர்வு பெறாமற் சும்மா விருப்பதே சுக மென்றிருந்தார்.

நார்மடிப் புடவையும், நரைத்த சிகையும், துளசிமணி மாலையும், இளமை வடிவமும், பூனைக் கண்ணும்,


குறிப்பு:- சாம்பசிவ ஐயங்கார். மேனகா என்பவை உண்மைப் பெயர்களை மறைக்கும் பொருட்டு வைக்கப்பட்ட கற்பனைப் பெயர்கள்.

மே.கா.I–2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/19&oldid=1252286" இலிருந்து மீள்விக்கப்பட்டது