பக்கம்:மேனகா 1.pdf/213

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாய் புளித்ததோ? மாங்காய் புளித்ததோ?

195

அருவருப்பை என்னவென்று சொல்வது? நாற்றம் நெடுந்துரம் வீசும் மாமிசங்களும், மீன்களும் வைத்து விற்கப்படும் கடைக்குள் தவறுதலாய் நுழைந்த வைதீகர்களைப்போலவும், அந்நியப் புருஷரது கூட்டத்தின் நடுவில் அகப்பட்டுக் கொண்ட பதிவிரதா ஸ்திரீயைப் போலவும், புலிக்குழாத்தில் அகப்பட்ட மான் கன்றைப்போலவும்; அவன் தடுமாறித் தவித்தான், கண்களை இறுக மூடிக்கொண்டான். ஒன்றையும் செய்யமாட்டாதவனாய் அப்படியே நின்று விட்டான். “தெய்வமே இது என்ன சோதனை அடுத்த தெருவில் வந்த ஒருத்திக்கு பயந்து இங்கு வந்தேன். இங்கே நூறு பேர்கள் வளைத்துக்கொண்டார்களே! நாடகக்காரனோடு ஒடிப்போன விபச்சாரிக்கா இத்தனை பேரும் பரிந்து என்னைத் துரத்துகிறார்களா! என்ன கேடுகாலம்! (பல்லை நறநறவென்று கடித்து) பீடைகளா! நான் எங்குபோனாலும் துரத்துகிறீர்களா? எனக்கென்ன பயித்தியமென்று நினைத்துக்கொண்டீர்களா?

“முட்டற்ற மஞ்சளையெண்ணெயிற் கூட்டி முகமினுக்கி
மெட்டிட்டுப் பொட்டிட்டுப் பித்தளை யோலையை
விளக்கியிட்டு
பட்டப் பகலில் வெளிமயக்கே செய்யும் பாவையர்மே
லிட்டத்தை நீதவிர்ப்பா யிறைவ கச்சி யேகம்பனே.”

என்று பட்டினத்துப்பிள்ளை ஒரே பாட்டில் உங்களுடைய சாயத்தை இறக்கியிருந்தும் உங்களுடைய ஜாதிக் குறும்பு போகவில்லையா? நீங்கள் நாடகத்தின் வேஷங்களா அல்லது நாட்டியக் குதிரைகளா? இல்லற தருமத்தை நடத்தும் புருஷனுக்கு நீங்கள் அனுசரணையாயிருந்து நல்வழியிற் பயன்படும் பொருட்டு தேகம் எடுத்துள்ள பதிவிரதைகளா? அல்லது இம்மாதிரி வேஷம் போட்டு தெருத்தெருவாய் அலைந்து குலுக்கி மினுக்கிக் காணும் புருஷர் மனதிலெல்லாம் காமத்தீயையும் கபடநினைவையும் உண்டாக்கித் திரிவதே பெருத்த புருஷார்த்தமாகச் செய்வதற்கு ஜென்ம எடுத்தீர்களா? உங்கள்மேல் குற்றமில்லை. உங்களை வெளியில் அனுப்பும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/213&oldid=1250840" இலிருந்து மீள்விக்கப்பட்டது