பக்கம்:மேனகா 1.pdf/217

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாய் புளித்ததோ? மாங்காய் புளித்ததோ?

199

பொருட்டும், பெற்றோர், பெரியோர் துணையின்றித் தன்னரசாக விடப்பட்டு அவ்விடங்களில் இத்தகைய துர்நடத்தைகளைக் கண்டு கெடுதலே பெரும்பாலதாய்ப் பெருகிவிட்டது. இதனால் நம் தேசத்திய மனிதர் இறுகுமுன் கட்டுத் தளர்வடைவோராயும் பல ஹீனராயும், அற்ப ஆயுளைக் கொண்டவராயுமாய் விடுகின்றனர். இத்தகைய நிலைமையில் நம்முடைய பெண்டீரை யெல்லாம் அன்னிய நாட்டாரைப் போல விட்டு விட்டால் அந்த அநர்த்தத்தை என்னவென்று சொல்வது? இந்த விஷயத்தில் மகம்மதியரே யாவரினும் மேலான புத்திசாலிகள்!. அவர்கள் எவ்வளவு பலசாலிகளா யிருக்கின்றனர்! அவர்களில் பத்துவயதுப் பையனுக்குள்ள வீரமும், பலமும் நமது முப்பது வயது ஆண்பிள்ளைக்கு இல்லையே! இதற்கு அவர்களுடைய கோஷா முறையே காரணமாகிறது. அவரவர் தத்தம் பெண்டிரையன்றி அயல் வீட்டுப்பெண்டிரைப் பார்ப்பதற்கும் சந்தர்ப்பம் இல்லை ஆகையால் அவர்களுடைய தேகபலமும் தேகக்கட்டும் தளர்வடைவதும் இல்லை; உருக்குலைவதும் இல்லை. அவர்களுடைய முன்னோரே பெண்டீரது அமைப்பின் கருத்தை உள்ளபடி அறிந்து அதற்குத் தகுந்த மருந்தைக் கண்டுபிடித்த மேதாவிகள்; அவர்களில் பெண்டீர் படிக்க வில்லையா ? புத்திசாலிகளாக இருக்க வில்லையா? வீட்டின் காரியங்களை நடத்தவில்லை? வீட்டிற்குள் இருந்து படிப்பதை யாரேனும் தடுக்கிறார்களோ! சே! உலகம் இப்படியும் கெடுமா? எத்தனையோ யுகங்களாக அரங்கத்தைக் காட்டிலும் அந்தரங்கத் விடுதியே சிறந்ததாகவும் பொருள் புகழ் முதலிய செல்வத்தைக் காட்டினும் கற்புச் செல்வத்தையே சிறந்த அழகாகவும் நிதியாகவும் மதித்து உயர்வடைந்துள்ள நட்சத்திரங்களாகிய நமது நாட்டின் பெண்டீர் தமது உன்னத பதவியை இழந்து கீழே செல்ல நினைப்பாரோ? நமது ஆண்பாலர் நாகரீகம் சுதந்திரமென்னும் போர்வையை நம் பெண்டீரின் மீது போர்த்தி அவரை விபச்சாரமாகிய சேற்றிலும் உளையிலும் இழுத்துவிட்டு ஆண் பெண்பாலராகிய இருதிறத்தாருக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/217&oldid=1250845" இலிருந்து மீள்விக்கப்பட்டது