பக்கம்:மேனகா 1.pdf/219

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாய் புளித்ததோ? மாங்காய் புளித்ததோ?

201

உட்கார்ந்திருந்தான். ஒரு அழகிய பெண் அவனுக்கு அருகில் நின்று அவன் சிரத்தில் எண்ணெய் தேய்த்துக் கொண்டிருந்தாள். அவ்விரு சித்திரப் பதுமைகளுக்கும் மேற் புறத்தில், தாரா சாங்கம், என்ற சொற்கள் பெருத்த எழுத்துக்களில் எழுதப்பட்டிருந்தன. “டங்டிங் மத்தாப்பு சுந்தரி முழு நிருவாணத்தோடு எண்ணெய் தேய்ப்பது யாவரும் கண்டு ஆநந்திக்கக் கூடிய அற்புதக் காட்சி! இந்த அதிர்ஷ்ட சமயத்தை இழக்காதீர். போனால் வராது.”

என்று எழுதப்பட்டிருந்த விளம்பரத்தைப் படித்தவுடன் வராகசாமிக்கு ரெளத்திராகாரமாய்க் கோபம் பொங்கி யெழுந்தது. பற்களை நறநறவென்று கடித்துக்கொண்டான். வண்டியில் இருந்த பயல்களை வண்டியோடு துக்கி, விளம்பரத்தை ஆவலோடு வாங்கிப் படித்த மூடப் பெண்டீரின் மண்டை மீது ஒரு அடியாக அடித்து இருதிறத் தாரையும் கொன்றுவிடவல்லமையும், அதிகாரமும் தனக்கு இல்லையே என்று ஏங்கித் துடித்தான். அவனது மனத்திலும் வாயிலும் கோடானு கோடி வசவுகள் ஒரு நிமிஷத்தில் எழுந்தன. மூக்கின் மீது விரலை வைத்துக் கொண்டு கல்லாய் நின்றான். “பெருத்த கூட்டத்திற்கு முன்னர் ஆடையில்லாமல் ஒரு ஸ்திரீ வருவது ஆநந்தமாம்! அற்புதமாம்! அதிர்ஷ்டமாம்! போனால் வராதாம்!!! இதைக் காட்டிலும் அதிகமான போக்கிரித்தனம் வேறுண்டோ? கேவலம் இழிந்த மிருகங்களின் நிலைமையை அடைவது அவ்வளவு அருமையான மோட்ச பதவி போலிருக்கிறதே ஆடை யில்லாமல் வந்து நடிக்கும் ஸ்திரீயை விட அங்கு கூடும் பிரபுக்களே மானங் கெட்டவர்கள்; யாவற்றையும் துறந்த பேமானிகள் துணிகளின் விலை ஒன்றுக்கு நான்காக உயர்ந்திருக்கும் இந்தப் பஞ்ச காலத்தில் ஏழை ஜனங்கள் தமது உடம்பை மூடுவது பெரிதாக நினைப்பதை விடுத்தும், அதன் பொருட்டு தேகத்தை வருத்திப் பாடுபடாமலிருந்து வஸ்திரங்களை நீக்கிவிட்டு எளிதில் இந்த ஆநந்த நிலைமையை அடைந்து விடலாமே! முட்டாள் ஜனங்களே! நீங்கள் இந்தக் கூத்தாடி நாய்களிடத்தில் பாடம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/219&oldid=1250849" இலிருந்து மீள்விக்கப்பட்டது