பக்கம்:மேனகா 1.pdf/229

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



14-வது அதிகாரம்

பாலுக்குங் காவல் பூனைக்குந் தோழன்

ன்பதாவது அதிகாரத்தின் இறுதியில் தாசில்தார் தாந்தோனிராயர், டிப்டி கலெக்டருடைய வீட்டிற்குள் வந்து அவருக்குக் காலைவந்தனம் செய்தார் என்பது சொல்லப்பட்டது அல்லவா! உடனே சாம்பசிவம் தமது கோபத்தையும், மனதின் துன்பத்தையும் சடக்கென்று மறைத்துக் கொண்ட வராய், “ராயரே! வாரும்; உட்காரும்” என்ற கூறிய வண்ணம் எதிரிலிருந்த ஒரு நாற்காலியைச் சுட்டிக் காட்டினார். அசந்தர்ப்பமான அந்த வேளையில் தாசில்தார்தம்மிடம் வந்தது, சாம்பசிவத்தின் மனத்திற்குப் பெருத்த துன்பமா யிருந்தாலும், தமது வீட்டைத் தேடி வந்த ஒரு பெரிதய மனிதரை உபசரியாமல் இருப்பது மரியாதைக் குறைவான காரியமென்று நினைத்து, அவருக்கு ஆசனம் அளித்துத் தாமும் தமது சாய்மான நாற்காலியில் உட்கார்ந்தார். கனகம்மாளும் இருந்தவிடம் தெரியாமல் பறந்து போய்விட்டாள். டிப்டி கலெக்டர் மீது அந்தரங்க அபிமானங் கொண்டவரைப் போல நடித்துத் தாண்டவமாடிய தாந்தோனிராயர் நாடகத்தில் சோகரசங் காட்டுவதைப் போல தமது முகத்தில் விசனக் குறிகளையும், அநுதாபக் குறிகளையும் வரவழைத்துக் காண்பித்தவராய் மிகவும் தயங்கி, ஒரு நாற்காலியில் உட்கார்ந்தும், உட்காராமல் நின்றும், “அதென்ன துரை முழுமூடனா யிருக்கானே! அவசரமாகப் பட்டணம் போகவேண்டுமென்று நீங்கள் கடிதம் அனுப்பிய தென்ன ரஜா கொடுக்கப்பட மாட்டாது என்று எழுதியனுப்பி விட்டானாமே?” என்று தளுக்காக ஆரம்பித்தார்.

சாம்ப:- (மாறுதலடைந்த முகத்துடன்) ஆம்; என்றைக்கும் கேட்குமுன் ரஜாக் கொடுக்கிற துரை, இன்று நல்ல சமயத்தில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/229&oldid=1252370" இலிருந்து மீள்விக்கப்பட்டது