பக்கம்:மேனகா 1.pdf/231

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாலுக்குங் காவல் பூனைக்குந் தோழன்

213

நேரில் வந்தால் என்ன வராவிட்டால் என்ன? என்னுடைய ஆபத்துக் காலத்தில் அதைப் பாராட்டாமல் அடக்கிக் கொண்டு இவரிடம் போவதுதான் இவருக்கு மரியாதை செய்வது போலவோ? அழகாயிருக்கிறதே!

தாந்தோனி:- (புன்சிரிப்போடு) நான் அவனை எளிதில் விடவில்லை. அவன் தயவு எனக்கு எதற்காக? மடியில் கனமிருந்தாலல்லவா வழியில் பயம்? இப்போது நீங்கள் சொன்ன மாதிரியே நான் அவனிடம் சொன்னேன். அவனுடைய பிடிதான் குரங்கு பிடியாயிற்றே; தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்றான். அவனுடைய மூர்க்கம் தணிவடையட்டும் என்று பேசாமல் விட்டுவிட்டேன். இந்த அக்கிரமத்தைக் கண்டு என் மனது சகிக்க வில்லை. தங்களிடம் வந்து, இவ்விடத்திய சந்தர்ப்பத்தை அறிந்து, அதற்குத் தகுந்தாற்படி நடந்து கொள்ளலாம் என்று இங்கு வந்தேன். மிகவும் அவசரமாகத் தாங்களே அவசியம் பட்டணம் போக வேண்டிய காரியம் போலிருக்கிறது?- என்று தணிவான குரலில் நயமாகக் கேட்டார். அது, என்ன அவசர காரிய மென்று கேட்பதைப் போலிருந்தது.

அதைக் கேட்ட சாம்பசிவம் உடனே விடை தராமல் தயங்கி யோசனை செய்தார்; தம்முடைய பெண் காணாமற் போய்விட்டாளென்று சொல்வது, பெண்ணின் கற்பைப்பற்றி அவர் சந்தேகிக்க இடங்கொடுக்கும் என்றும், பல இழிவான யூகங்களை உண்டாக்கும் என்றும், அது தனக்கு அவமானமாய் முடியும் என்றும் நினைத்தார். கடைசியாக, ஒரு சிறிய பொய் சொல்லவேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டார். அந்தப் பொய்யினால் பிறருக்கு எவ்விதத்துன்பமும் உண்டாவதில்லை யென்றும், தமது மானத்தைக் காப்பதற்கே சொல்லப்படுகிறது என்றும் நினைத்த சாம்பசிவம், “ஆமாம்! நானே போக வேண்டிய அவசரந்தான். என்னுடைய பெண்ணுக்கு உடம்பு மிகவும் அசெளக்கியமாக இருக்கிறதாம். உடனே வந்தால்தான் பெண்ணைப் பார்க்கலாம் என்று தந்தி வந்தது. அந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/231&oldid=1250889" இலிருந்து மீள்விக்கப்பட்டது