பக்கம்:மேனகா 1.pdf/233

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாலுக்குங் காவல் பூனைக்குந் தோழன்

215

போன்ற சின்ன வேலைக் காரர்களிடம் கடுமை காட்டினால், தங்களைப் போன்ற சம அந்தஸ்துள்ள பெருத்த அதிகாரி களிடத்தில் நிரம்பவும் மரியாதையாக நடந்து கொள்வது வழக்கமாம். அவர்கள் கண்ணியமான மனதைக் கொண்டவர்கள். இவன் யாரோ அற்ப பயல்; இவன் சீமையில் ஒரு அம்பட்டனுடைய மகனாம். இந்தப் பயல் இங்கே இவ்வளவு ஆடம்பரம் செய்து தானே ராஜா வென்று நினைத்துக் கொண்டு நம்மை யெல்லாம் ஆட்டி வைக்கிறானே. இவன் போன வருஷம் ஆறு மாசம் ரஜா வாங்கிக்கொண்டு சீமைக்குப் போயிருந்தான் அல்லவா? அப்போது நமது வெங்கப்பட்டி ஜெமீந்தார் வீராசாமி வாண்டையாரும் ஒரு வியாச்சியத்தின் பொருட்டு சீமைக்குப் போயிருந்தாராம். வாண்டையார் இந்த துரையை தற்செயலாக பார்த்தாராம்.துரை தன்னுடைய அப்பனுக்குத் தலை சிரைத்துக் கொண்டிருந்தானாம். வீடு ஒரு கையகலம் மாட்டுக்கொட்டில் மாதிரி இருந்ததாம். வாண்டையாரை உட்காரக் கூட சொல்ல இடமில்லையாம். அவ்வளவு கேவலமானவன் இங்கே வந்து இப்படி நாடகத்தில் வரும் ராஜாவைப்போல வேஷம் போடுகிறான். இப்படிப்பட்ட தொழிலைச் செய்பவனுக்குத் தயாளமும் நீதியும் எங்கிருந்து உண்டாகும்?

சாம்ப :- அப்படியா! அதனாலென்ன? ஏழைகளாயிருந் தாலென்ன? கேவலத் தொழில்செய்பவராய் இருந்தால் என்ன? உண்மையில், அவர்களுக்குத்தான் பச்சாதாபமும், இரக்கமும், அதிகமாக இருக்கும். இவர் யாருடைய பிள்ளையாய் இருந்தால் நமக்கென்ன? அதற்கும் நமக்கும் என்ன சம்பந்தம்? எத்தனையோ விஷயங்களில் இவரே கண்ணியமாகவும், பெரும் புத்தியைக் காட்டியும் நடந்து கொள்ளவில்லையா? அல்லது பெரிய பிரபுக்களின் பிள்ளைகளென்று வருகிறார்களே அவர்கள் எல்லோரும் இப்படிப்பட்ட அக்கிரமம் செய்வதில் லையா? அற்பத்தனமான காரியம் செய்வதில்லையா? இதை யெல்லாம் ஒரு பொது விதியாக வைத்துக்கொண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/233&oldid=1250895" இலிருந்து மீள்விக்கப்பட்டது