பக்கம்:மேனகா 1.pdf/238

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

220

மேனகா

நினைத்தார். நிற்க, பெரிய கலெக்டரும் தம்மைபற்றி இழிவான அபிப்பிராயங் கெள்வாரென்று எண்ணினார். அவர் இவ்வாறு சிந்தித்திருக்கையில், உட்புறத்திலிருந்த படியே, இங்கு நடந்தவற்றைக் கவனித்திருந்த கனகம்மாள் சாம்பசிவத்தை நோக்கி உள்ளே வரும்படி சைகை செய்தாள்.

சாம்ப:- அம்மாள் கூப்பிடுகிறாள், என்னவென்று கேட்டுவிட்டு வருகிறேன். கொஞ்சம் இரும் - என்று கூறிக்கொண்டே உள்ளே சென்றார். பொங்கியெழுந்த தனது ஆத்திரத்தையும், விசனத்தையும் சொற்களாலும் அபிநயங் களாலும் அதற்குமுன் வெளிப்படுத்திக்கொண்டிருந்த கனகம்மாள், தாசில்தாரைக் கண்டவுடன் ஒடுங்கி உட்புறத்தில் உட்கார வேண்டியது கட்டாயமாய்ப்போனது; அவள் பெரிதும் துடிதுடித்தவளாக உட்கார்ந்து வெளியில் நடந்த சம்பாஷணையை நன்றாகக் கவனித்துக்கொண்டிருந்தாள். உள்ளே வந்த சாம்பசிவத்தை நோக்கி, “அடே! வேற வழியில்லை; இப்போது மீன மேஷம் பார்த்துக் கொண்டிருந்தாயானால், அநியாயமாகப் பெண் நமக்கில்லாமல் போய்விடும்; இந்த உத்தியோகம் போனால் போகட்டும்; வேறு எந்த வேலை செய்தாயினும் பிழைத்துப்போகலாம். தங்க விக்கிரகத்தைப் போலப் பதினாறு வயதளவு வளர்த்த குழந்தை போனால் ஒருநாளும் வராது. யோசனை செய்யாதே; கடிதம் எழுதிக்கொடு. ஆபத்து வேளையில் கீழ் உத்தியோகஸ்தனுடைய உதவியையுந்தான் நாடவேண்டும்; வீண் கெளரவத்தைப் பாராட்டாதே. வயிறு வலிக்கிறதென்று வைத்தியரிடம் போய் மருந்து வாங்கி வரும்படி சேவக ரெங்கராஜாவை அனுப்பினாயே; அது ஒழுங்கா? அதைப் போல இதையும் ஒரு வயிற்று வலியாக நினைத்துக்கொள்; இந்த ஆபத்து வேளையில் எவ்விதமான குறைவு வந்தாலும் பார்க்கப்படாது” என்று உறுதியாகக் கூறினாள்.

சாம்பசிவம் வாய் திறவாதவராய் உடனே திரும்பி வந்தார். “ராயரே! அம்மாள் கூட நீர் சொல்லும் யோசனைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/238&oldid=1251058" இலிருந்து மீள்விக்கப்பட்டது