பக்கம்:மேனகா 1.pdf/239

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாலுக்குங் காவல் பூனைக்குந் தோழன்

221

படி செய்யலாமென்று சொல்லுகிறாள். நான் அப்படியே எழுதிக்கொடுக்கிறேன். தயவுசெய்து எடுத்துக்கொண்டு போம்” என்று சொல்லிய வண்ணம் ஒரு கடிதம் எழுதிக் கொடுத்தார். அதைப் பெற்றுக் கொண்ட ராயர், “நான் நான்கு மணிக்கு துரையிடம் போகிறேன்; உடனே அவருடைய உத்தரவை வாங்கிவிடுகிறேன். என்னை சீக்கிரம் அவர் அனுப்பிவிட்டால் நானே இவ்விடத்திற்கு நேரில் வருகிறேன். தாமசமாகும் போலிருந்தால், ஒரு சேவகனிடம் சொல்லி யனுப்புகிறேன்; நீங்கள் பிரயாணத்துக்கு ஆயத்தமாக இருங்கள்” என்று அன்பொழுகப் பேசிவிட்டு விடை பெற்றுக்கொண்டு தாந்தோனிராயர் வெளியில் நடந்தார்.

அன்று பகல் முழுதும் சாம்பசிவத்தின் வீட்டில் எல்லோரும் பட்டினி கிடந்தனர். அவரும், அவருடைய தாயாரும், மனையாட்டியும், “ரஜா கிடைக்குமோ கிடைக்காதோ, கிடைக்கா விடில் என்ன செய்வது” என்று நினைத்து பெரிதும் மனக்கவலை கொண்டு ஏங்கித் தவித்த வராய், தாந்தோனிராயரது வரவை ஆவலோடு எதிர்பார்த் திருந்தனர். ஈன்று வளர்த்த பெற்றோர் பெரியோருக்கன்றோ தமது குழந்தைகளின் அருமை உள்ளபடி தெரியும். மலட்டு மனிதரான பெருந்தேவியம்மாள் சாமாவையர் முதலிய பஞ்சைகளுக்கு ஒரு காலும் நெஞ்சு இளகாது அல்லவா!

சாம்பசிவத்தின் மைத்துனனான கிட்டான் தனது அக்காள் மகள் மேனகையைத் தனக்கு மணந்து கொடுக்கவில்லை யென்ற ஒருவகையான அதிருப்தியை நெடுங்காலமாய்த் தன் மனதில் வைத்திருந்தான் ஆயினும், அவளைத் தன் உயிருக்குயிராய் மதித்து வந்திருந்தவன். ஆதலின், அவளுக்குத் துன்பமிழைத்த பெருந்தேவி முதலியோரை ஒரே குத்தில் கொன்றுவிடுவதாகச் சொல்லிக் கொண்டும், பெரும் துயரையும் கோபத்தையும் கொண்டு இருந்தான். ஆயினும் அவனுக்கு மாத்திரம் பசி தாங்கக் கூடவில்லை. அவன் ஹோட்டலிற்குப் போய் சொற்பமாக போஜனம் செய்துவிட்டு வந்தான். அவர்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/239&oldid=1251059" இலிருந்து மீள்விக்கப்பட்டது