பக்கம்:மேனகா 1.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

மேனகா


சாக்குலே கொஞ்சம், பேக்குலே கொஞ்சம் என்றவனுடைய அறியாமைக்கும் உங்களுடைய அறியா மைக்கும் வித்தியாசமில்லை. நாங்கள் சொன்னால் உங்களுக் கெல்லாம் மூக்கின் மேல் கோபம் வந்துவிடும். நீங்கள் எல்லாமறிந்த மேதாவிகள், நாங்கள் இங்கிலீஷ் பாஷை படித்தறியாத முட்டாள்கள். பழைய மூட நம்பிக்கைகளை விடாத பட்டவர்த்தனம்; கர்நாடகம். புது நாடக மாடும் உங்களுக்கெல்லாம் இவ்வித உபத்திரவங்கள் வருவதேன்? ஆனால் உங்களுக்கென்ன வருத்தம்? நீங்கள் செய்யும் விஷப்பரிட்சையினால் ஒன்றையுமறியாத பேதைப் பெண்கள் வதைப்பட்டு அழிகிறார்கள் என்றாள்.

சாம்பசிவ ஐயங்கார் சிறிது கோபங்கொண்டார். எனினும் அதைக்காட்டாமல்,"அம்மா என்ன பைத்தியம் இது எல்லாம் அவரவர்களுடைய தலைவிதிப்படிதானே நடக்கும். நம்மாற் செய்யக்கூடிய தென்ன இருக்கிறது? ஆயிரம் முறை ஜாதகத்தைப் பார்த்தோ அல்லது அதுபோகத்தில் விடுத்தோ கலியாணம் செய்தாலும் வீட்டுக்கு வீடு வாசலுண்டு; கணவனுக்கும், மனைவிக்கும் சண்டையில்லாத வீடேது. ஒரு வீட்டில் சொற்ப சண்டை இருந்தால் இன்னொரு வீட்டிற் பெருத்த பூசலாயிருக்கிறது. ஏழைக் குடும்பங்களில் புருஷன் வழக்கத்திற்கு மாறாக சிறிது தாமதமாய் வீட்டிற்கு வந்தால், அவன்வேறு எந்த


குறிப்பு - ஒருநாள் கன்னட பாஷை பேசும் பிராமணர்கள் சிலர் தங்களுக்கு மாத்திரம் ஒரு விருந்து செய்து கொண்டார்களாம். கன்னட பாஷை யறியாத ஒரு தமிழன் அவர்களைப் போல வேஷம் போட்டுக் கொண்டு போஜனத்திற்கு உட்கார்ந்தானாம்; வாழைக்காய்கறியும், பாவற்காய்கறியும் கொணர்ந்து பரிமாறியவன்தமிழனுக்குக் கொஞ்சம் பரிமாறிவிட்டு “சாக்கா?” “பேக்கா?” என்றான். அவை “போதுமா?” “வேண்டுமா?” என்ற அர்த்தத்தைக் கொண்ட கன்னட மொழிகள். அவற்றை அறியான் தமிழன், அவையிரண்டும் இரண்டு கறிகளை முறையே குறித்தன வென்று நினைத்த தமிழன், “சாக்குல கொஞ்சம் பேக்குல கொஞ்சம்” என்றானாம். உடனே அவனைபிடித்து உதைத்து வெளிப்படுத்தினார்கள் என்று ஒரு வரலாறு உண்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/24&oldid=1248091" இலிருந்து மீள்விக்கப்பட்டது