பக்கம்:மேனகா 1.pdf/249

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாலுக்குங் காவல் பூனைக்குந் தோழன்

231

அநுமதியின்றி டிப்டி கலெக்டர் தமது பெண்ணை அழைத்து வந்து விட்டதாக எழுத்து மூலமான சாட்சி ஏற்பட்டிருந்தது. தாம் அவசரமாகப் பட்டணம் போக வேண்டுமென்று அவர் காலையில் எழுத்து மூலமாக ரஜாக் கேட்டிருக்கிறார். அதற்கு முன் பெண் ஒரு வருஷமிருந்து ஒருவாரத்திற்கு முன்னமே தான் கொண்டுபோய்விடப்பட்டாள். அவற்றை யெல்லாம் நன்றாக யோசித்த துரை, தாசில்தார் சொன்னது நிஜமென்று நம்பினவராய் மூக்கில் விரலை வைத்து, “என்ன ஆச்சரியம்! இது கேவலம் மிருகம் செய்யக்கூடிய காரியமே யொழிய மனிதர் செய்யத் தகுந்ததல்ல. இவன் என்னுடைய மாமனாராக மாத்திரம் இருந்தானானால், இவனைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றிருப்பேன். இவன் லஞ்சம் வாங்கினதைக் கூட நான் இதுவரையில் நம்பாமல் இருந்தேன். இப்போது பார்த்தால் இந்த மனிதன் எந்தக் குற்றத்தையும் செய்யக்கூடியவனாக இருக்கிறான். சே இன்று சாயுங்காலம் இந்தச் சங்கதியா என் காதில் விழவேண்டும்! பாவம்! பாவம்!!” என்று கூறி விசனித்தார்.

தாசில்:- இதோடு நிற்கவில்லை. நீங்கள் ரஜா கொடுக்க மாட்டேனென்று உத்தரவு செய்தீர்களே! அவர் அதை மதித்தாரா? இதோ 7 1/2 மணிக்குப் பட்டணம் போகிறார். இவரும் இவருடைய தாயாரும் போகிறார்கள். சுற்றுப் பயணம் போவதாகச் சொல்லிவிட்டுப் பட்டணம் போகிறார். இப்போது 6 1/2 மணியாகிறது. துரை யவர்கள் இப்போது ரயிலுக்கு வந்தால் அதையும் ருஜுப்படுத்தி விடுகிறேன் என்றார்.

துரை:- சரி, அதையும் பார்த்துவிடுகிறேன். எழுந்திரும் போகலாம் - என்று கூறி எழுந்தார்.

இருவரும் உடனே புறப்பட்டு அரைக்கால் மைல் தூரத்திலிருந்த ரயில் ஸ்டேஷனுக்கு வந்து சேர்ந்தனர். அப்போது மணி ஆறே முக்கால் ஆயிருந்தது. இருவரும் டிக்கட்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/249&oldid=1250930" இலிருந்து மீள்விக்கப்பட்டது