பக்கம்:மேனகா 1.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சாம்பசிவ ஐயங்கார்

7

ஸ்திரீயோடு பேசி விட்டு வந்தானோ வென்று நினைத்து அவன் மனைவி எரிச்சலும் பொறாமையும் கொண்டு அவனுக்குச் சாப்பாடு போடாமல் கோபித்துக் கொண்டு குப்புறப் படுத்து விடுகிறாள். பெரிய மனிதர் வீட்டிலோ தான் இல்லாத காலத்தில் தன் மனைவி பரிசாரகனோடு திருட்டு நட்புக் கொண்டாளோ வென்று கணவன் ஐயுறுகிறான். இப்படி தக்க முகாந்தரம் இன்றி ஒருவருக்கொருவர் சண்டை யிடுதலும் ஒருவர் மீதொருவர் வெறுப்பைக் கொள்ளுதலும் மனித இயற்கை; என்றாலும் இவன் செய்த காரியத்தைப்போல இந்த உலகத்தில் எவனும் செய்யத்துணிய மாட்டான்; இந்த முட்டாள் என்னை எவ்வளவு அவமதித்து நினைத்த விதம் வைது அவமானப் படுத்தினான் தெரியுமா? இப்படிச் செய்தவன் பெண்ணுக்கு என்ன தீங்கைத்தான் செய்யமாட்டான் அண்டை வீட்டுக்காரர்கள் என்னைக்கண்டவுடன் கண்ணீர் விட்டு அழாத குறையாக இவன் படுத்திவைத்த பாட்டையெல்லாம் சொன்னார்கள். அடடா! என்ன துரதிருஷ்டம் நமக்கிருப்பது ஒரே பெண் குழந்தை யென்று அதன் மேல் நமது ஆசையை யெல்லாம் வைத்து, கிளியை வளர்ப்பதைப் போல எவ்வளவோ அருமையாக வளர்த்து இங்கிதம் அறியாத எருமைக்கடா வினிடத்திற் கொண்டு போய்த் தள்ளினோமே! நம்முடைய புத்தியில் ஆயிரம் தரம் செருப்பால் அடித்துக் கொண்டாலும் அது நம்முடைய மடமைக்கும் போதாது” என்றார்.

கனகம்:- ஆமடா அப்பா! கலியாணத்திற்குப் பெண்ணிருப்பதாகப் பத்திரிகையில் விளம்பரம்செய்து புருஷனைத் தேடிப் பிடித்தாயல்லவா! அதற்குத் தக்க மரியாதையை நீ பெறவேண்டாமா? இந்தமாதிரி அதிசயத்தை எங்கள் அப்பன், பாட்டன் காலத்தில் கேட்டதே யில்லை. இது பெருத்த கூத்தாகத்தான் இருக்கிறது. இந்த உபாயத்தை நீங்கள் எவரிடத்திற் கற்றுக் கொண்டீர்களோ! உங்கள் குருவாகிய வெள்ளைக்காரர்கள் கூட இப்படிப் பத்திரிகையில் விளம்பரம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/25&oldid=1248092" இலிருந்து மீள்விக்கப்பட்டது