பக்கம்:மேனகா 1.pdf/266

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

248

மேனகா

வேலைபார்த்து வருகிறோமே! அவன் வீட்டில் நடந்த இந்த விஷயம் யாருக்காவது தெரியுமா? ஒருவருக்கும் தெரியாது; காதும் காதும் வைத்த மாதிரி இது நடந்துபோயிருக்கிறது. அவன் ஒன்றையும் அறியாதவனைப் போலவும், ஏதோ வியாபார நிமித்தம் போகிறவன் போலவும், நாகைப்பட்டணம் போய்விட்டானாம். அவளையும் நாகைப்பட்டணத்திற்குக் கொண்டுபோய் பந்தோபஸ்தாக வைத்திருக்கிறானோ, அல்லது, அவனுக்கு அந்தரங்கமான ஒரு வேலைக்காரி இருக்கிறாள், அவள் வசம் மேனகாவை ஒப்புவித்துப் போயிருக்கிறானோ தெரியவில்லை. எந்த வகையிலும் அவள் அவனிடமிருந்து தப்பிப் போயிருக்க முடியாது” என்றார்.

பெரு:- அப்படியானால் டிப்டி கலெக்டரே நேற்று நமக்கு கொடுத்த தந்தியோடு போலீசாருக்கும் தந்தி கொடுத்திருக்க வேண்டும்.

சாமா:- அப்படி யிருக்கலாம்.

கோமளம்:- அவள் மரக்காயனுடைய வீட்டிலிருந்து கொண்டே போலீசாருக்காவது, அவளுடைய அப்பனுக் காவது, வராகசாமிக்காவது கடிதம் எழுதி; நாமே துலுக்கனிடம் அவளை விற்றவர்களென்று தெரிவித்துவிட்டால், போலீசார் அவனைப் பிடித்துக்கொள்வார்களே! தான் தப்பும் பொருட்டு அவனே நம்மைக் காட்டிக்கொடுத்துவிட்டால், நாம் என்ன செய்கிறது?

சாமா:- பைத்தியந்தான்; அவள் கடிதம் எழுதி நாக்கை வழித்துக்கொள்ள வேண்டியதுதான்; அந்தக் கடிதத்தை வெளியில் யார் எடுத்துக்கொண்டுபோய் தபாலில் சேர்க்கிறது? முதலில் அவளுக்கு அங்கே காகிதம் யார் கொடுக்கப் போகிறார்கள்? அதைப் பற்றிக் கவலையே யில்லை. அவனுடைய தலை போவதாயினும், அவன் நம்மை ஒருநாளும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/266&oldid=1251348" இலிருந்து மீள்விக்கப்பட்டது