பக்கம்:மேனகா 1.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சாம்பசிவ ஐயங்கார்

9

போட்டுவிட்டாளாம்; அரைப்படி அரிசியைப் போட்டுவிட்டா ளென்று அவர்கள் அந்தப் பைத்தியத்துக்குச் சொல்லிக் கொடுத்தார்களாம். அந்த முழுமுட்டாள் இரும்புக் கரண்டிக் காம்பைப் பழுக்கக் காயவைத்துக் கையிற் சுட்டுவிட்டானாம். இதைக் கேட்டவுடன் என்மனம் பட்டபாட்டை என்னவென்று சொல்வேன் மானத்துக்கு அஞ்சிப் பேசாமல் வந்துவிட்டேன்.

கனகம்:- ஆகா! பொறுமையில் பூமாதேவி என்றே நம்முடைய குழந்தை மேனகாவை மதிக்க வேண்டும். இத்தனை அக்கிரமங்கள் நடந்திருந்தும், இவள் தன் புருஷன் மீதும், நாத்திமார்களின் மீதும் எவ்வித குறையும் சொல்ல வில்லையே! சூடுபட்ட தழும்பைக் கண்டபோது எனக்கு சந்தேகம் உதித்தது; என்ன வென்றேன். நெருப்புத்தணல் தவறுதலாகக் கையில் விழுந்து விட்டதாகச் சொன்னாளே மேனகா! ஆகா! இவளுடைய நற்குணமும், பெருமையுமே அவர்களை அவசியம் அடித்துவிடும். கொலை செய்யக்கூட அஞ்சமாட்டார்கள் பாதகர்கள். நகைகளை யெல்லாம் பறித்து அடகு வைத்து வாயிற் போட்டுக்கொண்டு குழந்தையை பிறந்த மேனியாக விட்டது போதாதென்று, இப்படி அடித்தும், சுட்டும், வைதும் உபத்திரவிப்பார்களோ! நம்முடைய பெண்ணுக்காகத்தானே நாம் இவ்வளவு பொருளை வாரிக்கொடுத்தோம். நம்முடைய பொன் மாத்திரம் விருப்பமாயிருக்கிறதோ? பிறர் தேடும் பொருளில் இப்படிப் பேராசை கொண்டலையும் நாய்களுக்கு வெட்கமென்ன? மானமென்ன? பெளரஷமென்ன? ஆணவமென்ன? அடடா! அவர்கள் வீடு குட்டிச் சுவராய்த்தான் போய்விடும் - என்றாள்.

சாம்ப:-என்னைக் கண்டவுடன் அந்தப் பைத்தியம், “ஏனடா இங்கே வந்தாய்? அயோக்கியப் பயலே” என்றும், “உள்ளே நுழைந்தால் காலை ஒடித்துவிடுவே” னென்றும் என்னுடைய சேவகர்களுக்கு எதிற் சொன்ன வார்த்தையை நான் மறப்பேனா! - என்றார்.

சமையலறையிலிருந்த கனகம்மாள் ஆத்திரப் பெருக்கில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/27&oldid=1248094" இலிருந்து மீள்விக்கப்பட்டது