பக்கம்:மேனகா 1.pdf/274

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

256

மேனகா

ஆடம்பரம் மாத்திரம் அதிகமா யிருந்ததே யன்றி, குதிரையோ மாதம் காதவழி மயமாய்ப் பறக்கும் நீலவேணிக் குதிரை, அதன் வயது சொற்பமே. அது உயிர்விட வேண்டிய முடிவுகாலம் ஆனபிறகு மேலே கொசருக்கு மூன்று நான்கு வருஷங்களே ஆயிருக்கலாம். உடம்பு முற்றிலும் முகத்திலும் எலும்புகள் மாத்திரம் இருந்தமையால், அது குதிரையைப் போலவும் இருந்தது. கழுதையைப் போலவும் இருந்தது. ஒவ்வொரு கண்ணிலும் எழுமிச்சங்காய் அளவு கையளவு வெண்ணெய் திரண்டிருந்தது. சதங்கை யொலிக்குச் சரியான் பின் புறக்கால் ஒன்றோடொன்று மோதி தத்தோம் தகதோ மென்று தாளம் போட்டு பஜனை செய்தன; அதற்கு வருஷம் முன்னூற்று அறுபத்தைந்து நாட்களும் விரத தினங்கள்; வயதான ஜெந்துவாதலால் அவ்வாறு பஜனை செய்து பட்டினி கிடந்து அடுத்த உலகத்துக்குத் தன்னைத் தயார் செய்துகொண்டு வந்தது. ஆனால், முகமெல்லாம் பட்டுக் குஞ்சங்கள் அழகு செய்தன. உடம்பு முழுதும் இழைத்திருந்ததாயினும், அதன் வால் மயிரும், அதை ஒட்டிய சாயிபுவின் தாடி மயிரும் கொஞ்சமேனும் இளைக்காமல், இரண்டு சாமரங்களாய் அசைந்து குதிரையின் எண்ணிறந்த புண்களில் மொய்த்த ஈக்களை ஒட்ட உதவியாயிருந்தன. அந்த வண்டிக்குள் வருபவர் யாவரென்று போலீஸ் இன்ஸ்பெக்டர் உற்று நோக்கினார். வண்டி அடுத்த நிமிஷத்தில் வந்து வராகசாமியின் வீட்டு வாசலில் நின்றது. அதற்குள்ளிருந்து கீழே இறங்கிய சாம்பசிவம், கனகம்மாள் ஆகிய இருவரும் அவ்வண்டியின் குதிரையைப் போல உயிரற்றவரைப் போல காண்போர் இரக்கங்கொள்ளும் வண்ணம் பரிதாபகரமான நிலையில் இருந்தனர். எப்போது பட்டணம் வருவோம், எப்போது தமது பெண்ணிருந்த இடத்தைக் கண்டு உண்மையை அறியப் போகிறோம் என்று ஆவல் கொண்டு இரவு முழுதும் கண் மூடாமல் முதல்நாட் காலையிலிருந்து தண்ணீரும் அருந்தாமல் பெருத்த வேதனை அடைந்து தவித்து வந்தனர். ஆதலின், அவர்களுடைய உடம்பில் உற்சாகம் என்பது ஒரு சிறிதும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/274&oldid=1251356" இலிருந்து மீள்விக்கப்பட்டது