பக்கம்:மேனகா 1.pdf/279

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திரிசங்கு சொர்க்கம்

261


அதைக் கேட்டுத் துடிதுடித்த கனகம்மாள் கையைப் பிசைந்து கொண்டு,"ஐயோ! அவர் இப்போது எங்கிருக்கிறார்? உயிருக்கு மோசமில்லையே?” என்று சகிக்கமாட்டாத ஆவலோடு கேட்டாள். அவர்களுக்கு அந்த ஒரு நொடியும் ஒரு கோடி வருஷங்களாய்த் தோன்றியது. வராகசாமி உயிர் துறந்திருப்பானோ வென்னும் சந்தேகம் உள்ளூற அவர்களை வதைத்து வாட்டியது.

சாமா:- உயிருக்கு ஆபத்தில்லை. ராயப்பேட்டை சர்க்கார் வைத்தியசாலையில் இருக்கிறான். என்றார்.

அப்போதே கனகம்மாள் சாம்பசிவம் இருவருக்கும் உயிர் வந்தது; சரியான மூச்சாக விடுத்தனர்.

சாம்ப:- காயம் அதிகமோ?

சாமா:- வண்டி முழங்காலில் ஏறிவிட்டது; அதில் ஒரு எலும்பு கொஞ்சம் ஒடிந்துபோய் விட்டதாம். இரத்தச் சேதம் இவ்வளவு அவ்வளவென்று சொல்லமுடியாது! அபாரம் அவன் இன்னம் கண்ணைத் திறக்கவில்லை. நேற்று ராத்திரி முழுதும் மருந்து கொடுத்தார்கள்; இன்று காலையில் நாங்கள் முன்று பேரும் போய் விட்டு இப்போதே திரும்பி வந்தோம். பெரிய டாக்டர் மிகவும் கவலைப் படுகிறார்; அங்கே எல்லோரும் கூடிக்கொண்டிருந்தால் சீக்கிரம் குணப்படாதென்று சொல்லி, எங்களை அனுப்பிவிட்டார்- என்றார்.

அந்தப் புதிய இடியைப் பெற்ற அவர்களுடைய மனம் ஆடி அலமர்ந்தது; அவர்களது தேகங்கள் மண்ணில் நிலைத்து நில்லாமல் விண்ணில் பறந்தன. அவர்களுடைய உள்ளம் பட்டபாட்டை என்னவென்று சொல்வது அவர்கள் அப்படியே திகைத்துப் போயினர்.

கனகம்மாள், “பெண் இப்போது இங்குதானே இருக்கிறாள்?” என்று மிக்க துன்பகரமான அந்த முக்கிய விஷயத்தை மெல்ல கேட்டாள். அந்தக் கேள்வியைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/279&oldid=1251361" இலிருந்து மீள்விக்கப்பட்டது