பக்கம்:மேனகா 1.pdf/291

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திரிசங்கு சொர்க்கம்

273


குதிரையின் இடக்கினால் வண்டி நின்றவுடன் இன்ஸ்பெக்டர் அதைப் பார்த்து வெளியில் வந்ததாகவும், வண்டியில் தாம் இருந்ததைக் கண்டவுடன் பழைய அறிமுகத்தால், தம்மை அவ்வாறு சலாம் செய்தார் என்றும் சாம்பசிவம் முதலில் நினைத்தார். பிறகு இறங்கி ஒரு நிமிஷம் வரும்படி மரியாதைக் குறைவாகத் தம்மிடம் அவர் சொல்லவே, சாம்பசிவம் ஒரு சிறிது திகைப்படைந்தார். அது காலை வேளையாதலால், ஒரு கால் தமக்கு பழம், காப்பி, முதலிய சிற்றுண்டிகள் கொடுத்து உபசரிக்க அழைக்கிறாரோ வென்று நினைத்தார்; என்றாலும் தம்முடைய அவசரத்தை நினைத்து, “ஸ்டேஷனுக்குள் என்ன விசேஷம்? நான் மிகவும் அவசரமாய்ப் போக வேண்டும்” என்று கூறினார்.

போலீஸ்:- ஸ்டேஷனில் அதிக தாமதப்படுத்தக்கூடிய வேலை ஒன்றுமில்லை. போலீஸ் கமிஷ்னர் வந்திருக்கிறார். அவர் தங்ளோடு மிகவும் அவசரமாக இரண்டொரு வார்த்தைகள் பேச விரும்புகிறார். உடனே திரும்பி வந்துவிடலாம்; தயவு செய்யவேண்டும் - என்று நயமாகவும் அதிகாரத்தோடும் கூறினார். அதைக்கேட்ட சாம்பசிவத்திற்கு அது உண்மை உலகமோ அல்லது தாம் கனவு நிலைமையில் இருக்கிறோமோ என்னும் சந்தேகம் உதித்தது; பெரிதும் ஆச்சரியத்தோடு, “என்ன ஐயா! நான் வண்டியிலிருக்கிறேன் என்பதை இப்போது தான் நீங்கள் பார்த்தீர்கள்! கமிஷனர் என்னோடு பேசவேண்டுமென்று எப்போது சொன்னார்? என் வரவை முன்னதாகவே எதிர்பார்த்திருப்பவரைப் போலப் பேசுகிறீர்களே! முதலில் நான் இந்த ஊருக்கு வந்ததுதான் உங்களுக்கு எப்படித் தெரியும்? இப்போது இந்த வழியாக நான் வருவேன் என்பதுதான் எப்படித் தெரியும்; அதற்குத் தகுந்தாற்போல, இவ்விடத்தில் வண்டியும் தானாக நின்றதும் ஆச்சரியமாக இருக்கிறது!” என்றார்.

போலீஸ்:- இந்த விவரங்களை யெல்லாம் அவரே தங்களிடம் நேரில் திருப்திகரமாகச் சொல்வார்; காத்திருக்

மே.கா.I–19

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/291&oldid=1251379" இலிருந்து மீள்விக்கப்பட்டது