பக்கம்:மேனகா 1.pdf/292

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

274

மேனகா

கிறார், தயவு செய்யுங்கள் - என்று மேன்மேலும் வற்புறுத்தி னார். சாம்பசிவையங்காருடைய மனதில் கோடானுகோடி எண்ணங்கள் உண்டாயின; தாம் செல்லும் இடங்களி லெல்லாம் போலீஸார் தம்முடன் தொடர்ந்து கொண்டே வருகிறார்களோ வென்றும், அவர்கள் அவ்வாறு செய்ய வேண்டிய முகாந்திரம் என்னவென்றும் நினைத்து நினைத்து எவ்வித நிச்சயமான முடிவையும் அடையக் கூடாதவராய் தயங்கினார். தாம் அதற்குமுன் பார்த்தும் அறியாத போலீஸ் கமிஷனர் தம்மிடம் என்ன அவசரசங்கதியைக் கூறப்போகிறார் என்றும், அது எத்தகைய புதிய துன்பத்தைச் செய்யக் காத்திருக்கிறதோ வென்றும் கவலை கொண்டு தவித்தார். பெண்ணின் விஷயமும், மருமகப்பிள்ளையின் விஷயமும் இன்னொரு புறத்தில் வதைத்தது. “நிற்கவேண்டாம் பற்வும் பறவு” மென்று அவரைத் தூண்டிக்கொண்டே இருந்தன. அந்த நிலையில் இருதலைக் கொள்ளி எரும்பு போலான சாம்பசிவம் அரை மனதோடு கீழே இறங்கி ஸ்டேஷனுக்குள் நுழைந்தார். அங்கு நடந்த சம்பாஷணையைக் கவனித்திருந்த கனகம்மா ளுடைய மனது இன்னதென்று விவரிக்க இயலாத ஒரு வகையான சஞ்சலத்தை அடைந்தது. இன்ஸ்பெக்டருடைய குரலைக் கேட்டபோதே கோட்டான் சாகுருவி முதலியவற்றின் அவகுரலைக் கேட்பதைப்போல இருந்தது. சாம்பசிவத்திற்கு ஏதோ பெருத்த விபத்து நேரக் காத்திருப்பதாக நினைத்த அம்மாள் வண்டியிலிருக்க மனமற்றவளாய்க் கீழே இறங்கினாள். சாமாவையரும் கூடத் தொடர்ந்தார். அவர்கள் இருவரும் ஸ்டேஷனுக்குள் நுழைந்தனர். அவர்களும் வந்ததை போலீஸார் ஆட்சேபிக்கவில்லை. சாம்பசிவம் உள்ளே சென்று, எதிரில் ஒர் ஆசனத்தில் உட்கார்ந்திருந்த ஒரு வெள்ளைக்கார அதிகாரியைக் கண்டார். அவர் நமது சாம்பசிவத்தைக் கண்டவுடன், அன்பான குரலில் மரியாதை யாக, “டிப்டி கலெக்டரே! வரவேண்டும்; இதோ இந்த ஆசனத்தில் உட்காருங்கள்” என்றார். சாம்பசிவம் அப்படியே உட்கார்ந்தார்; என்றாலும், விஷயம் இன்னதென்பது தெரியாமை மாத்திரம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/292&oldid=1251380" இலிருந்து மீள்விக்கப்பட்டது