பக்கம்:மேனகா 1.pdf/304

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

286

மேனகா

ஒன்பதரை மணிக்கு வைத்தியசாலையிலிருந்து கிளம்பிய வண்டி மிகவும் சீக்கரமாக, பிற்பகல் ஒரு மணிக்கு செங்காங்கடைத் தெருவை அடைந்து (மூன்று மயில் தூரம்) வீராச்சாமி நாயுடு எவ்விடத்தில் ஜாகை வைத்துக் கொண்டிருக்கிறான் என்று சாமாவையர் விசாரிக்க, அவன் நாகமணித் தோட்டத் தெருவில் குடியிருக்கிறான் என்பது தெரிந்தது. வண்டி அவ்விடம் சென்றது. அது பரத்தையர் வசிக்கும் தெருவாதலால், அங்கு எப்போதும் இரவாகவே யிருந்தது. வீட்டின் கதவுகள் திறக்கவில்லை; மனிதரும் காணப்படவில்லை. பிளேக் வியாதி கொண்டதினால் காலி செய்யப்பட்ட ஊரைப்போல, அந்த இடம் மிகவும் பயங்கரமாகக் காணப்பட்டது. சூரியனும் அந்தத் தெருவில் தனது கிரணங்களை விடுவதற்கு அஞ்சுபவன் போலத் தனிமையில் நின்று மேற்குப் புறத்திலிருந்த தெருவிற்கு ஒடப் பார்த்தான். ஆந்தை, கோட்டான், கூத்தாடிகள், பரத்தையர், கள்வர், கொலைஞர், அமெரிக்க தேசத்திய ஜனங்கள் முதலியர் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவ ராதலின், நமது பகல் அவர்களுக்கு இரவல்லவா? அதனால், அந்தத் தெருவில் யாவரும் படுக்கையில் இருந்தனர்.

வீராசாமி நாயுடு எந்த வீட்டில் இருக்கிறார் என்பதைச் சொல்லக்கூடிய மனிதன் எவனும் அங்கு காணப்படவில்லை. சாமாவையரும் வண்டிக்காரனும் கீழே இறங்கி வீடுதோறும் சென்று கதவைத் தட்டினர்; ஒரு வீட்டில் பதிலே இல்லை. இன்னொரு வீட்டில் அப்போதே பயங்கரமாக கொட்டாவி விடுத்துக் கூச்சல்செய்து விழித்துக் கொண்ட ஒரு மனிதன் இன்னமும் தனது உணர்வைப் பெறாமல் “ஆ” “ஊ” என்ற மறுமொழியே கொடுத்தான். இன்னொரு வீட்டில் அரைத் தூக்கத்திலிருந்த ஒரு கிழவி “ஆழது? இங்கே ஒழுத்தழுமில்லே! போழா!” என்று குழறிக்பேசி அதட்டினாள். அவ்வாறு அவர்கள் வீண் பாடுபட்டுக்கொண்டே செல்ல, அப்போது தெய்வச் செயலாக அங்கு ஒரு வழிப்போக்கன் வந்தான். அவன் வீராச்சாமி நாயுடுவின் வீட்டைக் காட்டினான். சாமாவையர், சாம்பசிவம், கனகம்மாள் ஆகிய மூவரும் அந்த வீட்டை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/304&oldid=1251399" இலிருந்து மீள்விக்கப்பட்டது