பக்கம்:மேனகா 1.pdf/307

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திரிசங்கு சொர்க்கம்

289

முதலிய நிவேதனம் வைக்கப்பட்டிருந்தன. வேறு யாரோ வரப்போகிறார்களென்று நினைத்து அமர்த்தலாகக் கால்மேல் கால் போட்டு உட்கார்ந்திருந்த வீராசாமி நாயுடு சாம்பசிவத்தைக் கண்டவுடன் திருக்கிட்டுத் தனது கண்களை நம்பாமல் வாரிச் சுருட்டிக்கொண்டு எழுந்து அடங்கி யொடுங்கி குனிந்து கைகுவித்து, “சுவாமி! நமஸ்காரம்; வரவேண்டும்” என்று அன்போடு வரவேற்று, நாற்காலிக்காக அங்குமிங்கும் தாண்டிக் குதித்தான். ஒன்றும் அகப்படாமையால், எதிரிலிருந்த ஒரு கம்பளியை எடுத்துக் கீழே விரித்து உட்காரும்ப்டி வேண்டினான். அவர் தஞ்சை டிப்டி கலெக்டரென்பது அவனுக்கு நன்றாகவே நினைவிருந்தது; அவனுடைய அந்தரங்கமான விசுவாசத்தைக் கண்ட சாம்பசிவத்தின் அருவருப்பு ஒரு சிறிது தணிந்தது; அவரும் புன்னகை காட்டி, “நான் உட்காருவதற்கு நேரமில்லை; நடு தூக்கத்தில் உம்மை நாங்கள் எழுப்பிவிட்டோம். ராத்திரி யெல்லாம் கண் விழித்திருப்பீர்கள். பக்கத்திலுள்ள நாட்டுப் பிள்ளையார் கோயில் தெருவுக்கு ஒரு காரியமாக வந்தோம்; நீர் இங்கே இருப்பதாகக் கேள்விப்பட்டு உம்மையும் பார்த்துவிட்டுப் போகலாமென்று வந்தோம். வேறொன்றும் விசேஷ மில்லை; செளக்கியந்தானே?” என்றார்.

நாயுடு:- (கைகுவித்து) தங்கள் தய வினால் செளக்கி யந்தான். ஏதோ இருக்கிறேன். இந்த ஏழையை மதித்து தாங்கள் இவ்வளவு தூரம் தயவு செய்தது என்னுடைய பாக்கியந்தான் - என்றான். ஆனால், அவனுடைய மனது மாத்திரம் ஒருவாறு அச்சங்கொண்டது. அவர் தமக்கு அதிகரித்த வருமானவரி விதிக்கும் பொருட்டு உளவறிய வந்திருப்பாரோ வென்று ஒருவகையான சந்தேகம் உதித்தது. ஆகையால், அவன் தனது தேக செளக்கியத்தைக்கூடப் பூர்த்தியாகத் தெரிவித்துக் கொள்ளாமல் இழுப்பாகக் கூறினான்; தான் செளக்கியமாக இருக்கிறதாக அவன் சொன்னால், அதனால் அவனுக்கு நல்ல வருமானம் வருகிறதென்று நினைத்து வரி விதிக்கக் கூடிய சர்க்கார்அதிகாரிகளும் இருப்பதால், அவன் தனது க்ஷேமத்தைத்

மே.கா.I–20

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/307&oldid=1251405" இலிருந்து மீள்விக்கப்பட்டது