பக்கம்:மேனகா 1.pdf/325

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அணங்கோ ? ஆய்மயிலோ ?

307

தன்னுடைய கரத்திலிருந்த கத்தியை மாத்திரம் யாரோ சற்று முன்னே பிடுங்கியது நினைவுண்டாயிற்று. தான் கண்ணை மூடித் திறப்பதற்குள் அத்தகைய மாறுதல் தனது தேகத்தில் வந்திருப்பதென்ன விந்தை அது இந்திரஜாலம் மகேந்திர ஜாலமோ சே! எல்லாம் தவறு! எல்லாம் பொய் தான் காண்பது கனவே! என்று நினைத்த அவளது பேதை மனம் முற்றிலும் குழம்பிச் சோர்வடைந்து போயிற்று. மனத்தி லெழுந்த எண்ணிறந்த சந்தேகங்களின் சுமையைத் தாங்க மாட்டாமல் மனம் தவித்து மழுங்கி ஓய்வை அடைந்து விட்டது ஆகையால், கண்ணிமைகள் மூடிக்கொண்டன! அவளது மனம், தன் குழப்பத்தால், தன்னையே ஏமாற்றிக்கொண்டது. வெள்ளை வஸ்திரத்தை விதவைகளே அணிபவர். தான், ஒருநாளும் மஸ்லின் துணியை அணிந்ததில்லையே. தானறியாவகையில் அது அப்போது தனது உடம்பில் எப்படி வந்தது? தான் மேனகாவன்று; வேறு யாரோ ஒருத்தி என்று நினைத்து எண்ணாததெல்லாம் எண்ணி மயக்கமும் குழப்பமும் அடைந்தாள்.

மேலும் அரை நாழிகை சென்றது. ஊற்றுக் கண்களிலிருந்து தெளிந்த நீர் ஊறுதலைப்போல, அவளுடைய உணர்வு பெருகி தெளிவைப் பெறப் பெற, விஷயங்கள் யாவும் உண்மையாகவே தோன்றின. தான் மேனகா தான் என்னும் நினைவு இயற்கையாகவும், உறுதியாகவும் அவளது மனதில் எழுந்து மாறுபடாமல் நிலைத்து நின்றது. தான் கனவு காணவில்லை யென்பதும் தெளிவாகத் தெரிந்தது. அப்படியானால், தானறியாமல், தன்னுடம்பில் வேறு வஸ்திரம் எப்படி வந்தது, தனது பட்டுத் துகிலை எவர் களைந்தவர் என்ற சந்தேகங்களே இப்போது உரமாக எழுந்து வதைத்து அவள் மனதில் வேறு பலவித பயங்கரமான யூகங்களுக்கு இடங் கொடுத்தன. பெருத்த வேதனை உண்டாயிற்று. தனது கையிலிருந்த கத்தியைப் பிடுங்கிக் கொண்ட மகம்மதியனே தனது ஆடையை மாற்றினவ னென்றும், அவன் தனது கற்பை பிடுங்கமுற்பட்டபோது தான் மயங்கிக் கீழே தரையில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/325&oldid=1251438" இலிருந்து மீள்விக்கப்பட்டது