பக்கம்:மேனகா 1.pdf/326

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

308

மேனகா

விழுந்ததாக கனவைப் போல ஒரு ஞாபகம் உண்டாயிற்று. உண்மை அப்படி இருக்க, தான் இப்போது விலையுயர்ந்த உன்னதமான கட்டிலில், மிக்க இன்பகரமான வெல்வெட்டு மெத்தையின் மீது படுத்திருப்பதன் முகாந்தரமென்ன வென்பதை நினைத்தாள். தனது கற்பு ஒழிந்துபோன தென்பதை தனது சயனம் உறுதிப்படுத்தியது. என்ன செய்வாள்! அவளது தளர்வடைந்த மனது பதறியது. வேதனையும் வியாகுலமும் பெருத்த கோபமும் மகா உரத்தோடு எழுந்து மனதிற் குடிகொண்டன. அவளது தேகமோ அவளுக்குச்சகிக்க இயலாத அருவருப்பைத் தந்தது. தனது உடம்பைப் பார்ப்பதற்கே கண் கூசியது. மகம்மதியனைத் திரும்பவும் பாராமல் தற்கொலை புரிந்துகொள்ள முயன்ற தனது எண்ணத்தில் மண்விழுந்து போனதை நினைத்து பெருந்துயரமும் ஆத்திரமும் அடைந்தாள். களங்க மடைந்துபோன தனது இழிவான தேகத்தை உடனே சாம்பலாக எரித்து அழித்துவிட தனக்கு வல்லமை யில்லையே என்று நினைத்துப் பதைத்தாள். அவ்வளவு நாழிகை தனது வேசைச் சரீரத்தைச் சுமந்திருப்பதைப் பற்றி ஆறாத் துயரமடைந்தாள். கட்டிலின் மீது தனக்கருகில் யாரோ ஒருவர் உட்கார்ந்திருந்தது அவள் மனதில் அப்போதே புலனாயிற்று. அது தன்னைக் கெடுத்த மகம்மதியனே என்று நினைத்தாள். அவள் மனதில் ரெளத்திராகாரமாய்க் கோபம் பொங்கி எழுந்தது.

அந்த அசங்கியமான படுக்கையில், அன்னிய புருஷனுக்கருகில் தானிருப்பதாக நினைத்து, தான் ரெளரவாதி நரகத்தில் இருப்பதாக எண்ணிப் பதறினாள். அவ்விடத்தை விட்டெழுந்து அப்பாற் செல்ல நினைத்து மிகவும் வற்புறுத்தி முயன்று பார்த்தாள். அவளது மனது மாத்திரம் துடித்ததன்றி, தேகம் ஒரு சிறிதும் அசையும் வல்லமை அப்போது இல்லாதிருந்தது. தான் நினைத்த விதம் கண்களைத் திறந்து நோக்கவும் இயற்கையான திறனுண்டாகவில்லை. தேகம் ஜடப் பொருளாய்க் கிடந்தது. தேகவலுவற்றவருக்கு மற்றையோரிலும் கோபமும், ஆத்திரமும் அதிகமென்பது யாவரும் அறிந்த விஷயமாம். அதற்கிணங்க, செயலற்றுக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/326&oldid=1251442" இலிருந்து மீள்விக்கப்பட்டது