பக்கம்:மேனகா 1.pdf/327

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அணங்கோ ? ஆய்மயிலோ ?

309

கிடந்த மேனகா தன் மனதில் பொங்கி எழுந்த சீற்றத்தைக் கடவுன் மீது திருப்பினாள். நிரபராதியான ஜெகதீசனை நினைத்த விதம் துஷிக்கலானாள். “ஆ பாழுந் தெய்வமே! உன் கோவில் இடியாதா? நீநாசமாய்ப் போக மாட்டாயா? என்னை இப்படிக் கெடுத்து சீர்குலைத்துக் கண்ணாரப் பார்க்க வேண்டுமென்று எத்தனை நாளாய் நினைத்திருந்தாய்! என் வயிறு பற்றி எரிகிறதே மனம் பதைக்கிறதே! உயிர்துடிக்கிறதே! தெய்வமே, நீ கருணாநிதி யென்று அழைக்கப்படக் கொஞ்சமும் யோக்கியதை உள்ளவனா நீ! முற்காலத்தில் நீயா திரெளபதியின் மானத்தைக் காத்தவன்! எவனோ புளுகன் எழுதி வைத்தான் மகா பாரதத்தை! சதிகார தேசத்திற்கு கொலைகாரன் அரசனாம் என்பதைப்போல உன்னுடைய மகிமை இருக்கிறது. உன்னுடைய படைப்பும், உன்னுடைய நியாயமும் நன்றா யிருந்தன! இந்தப் பாழும் உலகத்தில் கற்பாம்! நீதியாம்! சே! மூடத்தனம்!” என்று கடவுள் மீதும், உலகத்தின் மீதும், தனது தேகத்தின் மீதும் பெரிதும் ஆத்திரமும் வெறுப்பும் கொண்டு தூஷித்துத் திரும்பவும் அநாசாரம் பிடித்த அந்த மெத்தையை விடுத்து எழுந்து அப்பால் போய், நொடியேனும் தாமதியாமல் தனது உயிரை மாய்த்துக்கொள்ள நினைத்தாள். அவளது மனம் பம்பரம்போலச்சுழன்றது. ஆனால், அவளதுதேகம், ஒரே பச்சை புண்ணாகவும், இரணக் குவியலாகவும், அசைவற்று கட்டிற்கடங்காது கிடந்தது. மனது மாத்திரம் புதிதாய்ப் பிடித்துக் கூண்டில் அடைக்கப்பட்ட கிள்ளைப் போல படபடத்து தவித்தது.

அந்த நிலைமையில் அவளுக்கு அருகில் மெத்தையில் உட்கார்ந்திருந்தவர் தமது கரத்தால் அவளது முகத்தைத் தடவிக் கொடுத்ததாக அவளுடைய உணர்வில் புலனாயிற்று. அந்தக் கை ஆண்பிள்ளையின் முரட்டு கையாகத் தோன்றவில்லை. அது பூவிதழைப்போல மிருதுவாயும், குளிர்ச்சியாயும் இருந்தது. பச்சைக் கற்பூரம், குங்குமப்பூ, பனிக்கட்டி முதலியவை கலக்கப்பட்ட சந்தனம், ஜுர நோய் கொண்டவனது உடம்பில் பூசப்படுதலைப்போல, அது அளவு கடந்து இனிமையாய்த்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/327&oldid=1251450" இலிருந்து மீள்விக்கப்பட்டது