பக்கம்:மேனகா 1.pdf/329

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அணங்கோ ? ஆய்மயிலோ ?

311

ஒழுங்கல்ல வென்றும் நினைத்தாள். மெல்ல தனது கண்ணைத் திறந்தாள். அவள் ஒரு புறமாகத் திரும்பிப் படுத்திருந்தவளாகையால், அருகில் இருந்தவளை முதலில் பார்க்கவில்லை. அவளது அகன்ற சுந்தரவிழிகள் ஒரு நொடியில் அந்த அறையை நன்றாக ஆராய்ந்தன. உடனே ஒரு விஷயம் எளிதில் விளங்கியது. அது, தான் மகம்மதியனோடு தனிமையிலிருந்த அறையல்ல வென்பது நிச்சயமாயிற்று. தான் ஒரு அறையிலிருந்து இன்னொரு அறைக்கு வந்ததையும், தனது தேகத்திலிருந்த ஆடையாபரணங்கள் விலக்கப் பட்டதையும், தான் அறியாதுபோனது என்ன மாயமோ என்று திகைத்தாள். அப்போது தான் துயின்றாளோவென்று சந்தேகித்தாள். அல்லது மயக்கந்தரும் மருந்தை, அந்த மகம்மதியன் தனது வஞ்சகத்தால், தன் உடம்பில் செலுத்தி விட்டானோ வென்று எண்ணாத தெல்லாம் எண்ணினாள். அந்த இடமும் மிக்க அழகாக அலங்கரிக்கப்பட்ட ஒரு சயன அறையாய்க் காணப் பட்டது. எங்கும் அழகிய மலர்களையும், இலைகளையும் கொண்ட தொட்டிகளும் சம்பங்கிக் கொடிகளும், ரோஜா செடிகளும், நிலைக் கண்ணாடிகளும், படங்களும், பதுமை களும், நாற்காலிகளும் சோபாக்களும், பிறவும் நிறைந் திருந்தன. தானிருந்த கட்டிலும் அதன் மீதிருந்த மெத்தையும், திண்டு, தலையணைகளும், ஏராளமான மெல்லிய பட்டுப் போர்வைகளும், பட்டுத் துப்பட்டிகளும், சால்வைகளும், கொசு வலைகளும் விலை மதிப்பற்றவை யாவும், ஒரு சிறிய மாசுமற்றவையாயும் இருந்தன. மனிதரது பஞ்சேந்திரி யங்களுக்கும் சுகம் தரத்தக்க பொருட்கள் யாவும் அந்த அறையில் காணப்பட்டனவாயினும், மிகவும் மேம்பட்ட மகா ராஜனும், அங்கிருந்த இனிய போகத்தில் ஆழ்ந்து ஈடுபட ஆவல் கொள்ளத் தக்கனவாய் அவை காணப்படினும், மேனகா தான் தீத்தணல்கள், தேள்கள், பாம்புகள் முதலியவற்றின் மீது கிடப்பதாக எண்ணங்கொண்டு அருவருப்படைந்து வருந்தினாள். அவளது விழிகள் அந்த அறையை ஆராய்ந்த போது இன்னொரு புதுமை அவளது காட்சியில் பட்டது. கட்டிலிற்கு அருகிலிருந்த ஒரு நாற்காலியில் வெள்ளைக்கார

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/329&oldid=1251452" இலிருந்து மீள்விக்கப்பட்டது