பக்கம்:மேனகா 1.pdf/330

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

312

மேனகா

துரைசானி உட்கார்ந்திருந்ததைக் கண்டு திடுக்கிட்டாள். அவளது வயது சற்றேறக்குறைய முப்பத்தைந்திருக்கலாம். மெலிந்ததும் கம்பீரமாக நீண்டதுமான அழகிய தேகத்தைக் கொண்ட அந்த மாது, தனது இடக்கரத்தில் ஒரு சிறிய தோல் பையையும், வலக்கரத்தில் வைத்தியர் பிணியாளரின் மார்பில் வைத்து நாடி பார்க்கும் குழாயையும் வைத்திருந்தாள். அந்த துரைஸாணியை தான் அடிக்கடி பார்த்திருப்பதாக உடனே மேனகாவுக்கு நினைவுண்டாயிற்று. தான் அவளைக் கண்டது எவ்விடத்தில் என்று மேனகா யோசனை செய்தாள். தனது கணவன் வசித்த தொளசிங்கப் பெருமாள் கோவில் தெருவிலுள்ள வீடுகளில் பெண்பாலருக்கு வைத்தியம் செய்ய அவள் அடிக்கடி வந்துபோனதைத் தான் கண்டதாக எண்ணினாள். அவள் தனது கண்ணைத் திறந்து புதுமையான அத்தனை விஷயங்களையும் கண்டதனால் மிகவும் சோர்வடைந்தாள். இமைகள் திரும்பவும் மூடிக்கொண்டன.

கால் நாழிகை வரையில் அயர்வடைந்து உணர் வற்று உறங்கினாள். மறுபடியும் தனது உணர்வைப் பெற்றாள். திரும்பவும் மனது வேலை செய்யத் தொடங்கியது. தனக்கருகில் துரைஸானி உட்கார்ந்திருப்பதி லிருந்து, தனக்கு ஏதோ தேக அசெளக்கியம் உண்டான தென்றும், அதன் பொருட்டு அவள் வந்திருப்பதாகவும் யூகித்துக்கொண்டாள். தனக்கு எவ்விதமான நோயுண்டானது என்பதைப்பற்றி நினைத்துப் பார்த்தாள். ஒரு கால்தான் தன்னைக் கத்தியாற் குத்திக் கொண்டதனால் இரணம் ஏற்பட்டதோ வென்று ஐயமுற்றாள். தனது தேகத்தில் எந்த இடத்தில் நோவுண்டாகிறது என்பதை அறிய தனது தேக நிலைமையை ஊன்றி அகக்கண்ணால் நோக்கினாள். பொதுவாக தேகம் முற்றிலும் மரத்துப் புண் பெற்று அசைவின்றித் தோன்றியதே யன்றி ஏதாயினும் குறித்த விடத்தில் எத்தகைய பிணி இருப்பதாகவும் புலப்படவில்லை. ஆதலால் அவள் அவ்விஷயத்தில் எத்தகைய முடிவிற்கும் வரக்கூடாமற் போனது. அப்போது பகல் நேரமா யிருந்ததை உணர்ந்தாள். தான் இரவு பன்னிரண்டு மணிக்கே தற்கொலை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/330&oldid=1251453" இலிருந்து மீள்விக்கப்பட்டது