பக்கம்:மேனகா 1.pdf/335

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அணங்கோ ? ஆய்மயிலோ ?

317

அதற்குள் நான் திரும்பவும் வருகிறேன்- என்று கூறியவண்ணம் அறையை விட்டு வெளியிற் சென்று தனது மோட்டார் சைக்கிலில் ஏறிக்கொண்டு போய்விட்டாள்.

அவளை அனுப்பிவிட்டுத் திரும்பி வந்த நூர்ஜஹான் பக்கத்திலிருந்த மருந்தை எடுத்து மேனகாவின் மார்பில் தடவி விட்டு, முன்போலவே அருகில் உட்கார்ந்துகொண்டு பரிதாபகரமாகக் காணப்பட்ட அவளது களங்கமற்ற முகத்தைப் பார்த்தவண்ணம் இருந்தாள். தனது கணவரும், பிறரும் செய்த சதியினால், ஒரு சூதையுமறியாத அப் பெண்பேதை அடைந்த நிலைமையைப் பற்றி நினைத்து நினைத்து வருந்தினாள். அவளைத் திரும்பவும் அவளது கணவனிடம் சேர்த்து, அவன் அவளது கற்பின் விஷயத்தில் எவ்வித ஐயமும் கொள்ளாதபடி திருப்தியடைந்து அவளை ஏற்றுக்கொள்ளும்படி எப்படிச் செய்வதென்னும் யோசனையே ஓயாமல் அவளது மனத்தில் எழுந்து பெருஞ்சுமையாக அழுத்தியது. அதைக் குறித்து எவ்விதமான முடிவிற்கும் வரக்கூடாமையால் தாமரை இலைத் தண்ணிரைப் போலத் தத்தளித்தாள். அவளது முழு வரலாற்றையும், அவள் வாய் மூலமாக எப்பது அறிவதென்பதைக் குறித்து மிகவும் ஆவல் கொண்டவளா யிருந்தாள். அதுகாறும் தனது கணவன் பரமயோக்கியனென்று நினைத்து அவனே உயிரென மதித்துத் தனது பாக்கியத்தைக் குறித்துப் பெருமை யடைந்திருந்ததெல்லாம் ஒரு நொடியில் ஒழிந்து போனதையும், அவன் கேவலம் இழிகுணமுடைய வனாய், வேசைப்பிரியனாய், சமயத்திற்கேற்ற விதம் பொய்மொழி கூறி வஞ்சிக்கும் அயோக்கியனாயிருந்ததையும் ஓயாமல் சிந்தித்தாள். அதைப்பற்றி நினைக்கும்போது துக்கமும் வெட்கமும் அழுகையும் அவள் மனதில் பொங்கியெழுந்து நெஞ்சையடைத்தன. கண்களும் மனதும் கலங்கின. அப்போதைக் கப்போது கண்ணீர்த் துளிகள் தோன்றின. நெடுமூச்செறிந்தாள். மனிதர் வெளிப்பார்வைக்கு அழகாயும், உட்புறத்தில் அவ்வளவு மிருகத்தன்மையைக் கொண்டும் இருப்பாரோவென்று நினைத்து அவள்பெரிதும் வியப்புற்றாள்; தன் கணவன் எழுத்து வாசனை யறியாத முட்டாளன்று; அப்படி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/335&oldid=1251459" இலிருந்து மீள்விக்கப்பட்டது