பக்கம்:மேனகா 1.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50

மேனகா

உதைத்தாலும் அதையும் பெரும் பாக்கியமாகக் கொள்ளத் தயாராக இருந்தாள். அவன் அப்போதும் அவளிடம் பேசாமலும், எவ்வித தடையும் செய்யாமலும் அசைவற் றிருந்தான். அவ்விதம் இருவரும் இரண்டொரு நிமிஷ வெட்கத்தினாலும், பரஸ்பர அச்சத்தினாலும் மெளனம் சாதித்தனர். இனியும், தான் பேசாமல் இருந்தால் கூடாதென நினைத்த மேனகா, வருடியவாறே தனது கையால் அவனுடைய மார்பையும் கரங்களையும் தடவிப் பார்த்து, “ஆகா! என்ன இவ்வளவு இளைப்பு முன்னிருந்த உடம்பில் அரைப்பாகங் கூட இல்லையே” என்றாள். அவளது உள்ளத்தினடியிலிருந்து தோன்றிய அவ்வினிய மொழிகள் புல்லாங்குழலின் இன்னொலியைப் போல அவனது செவிகளிற் பட பஞ்சைப் போன்ற குளிர்ந்த அவளுடைய மெல்லிய கரம் உடம்பிற் படக் கணவன் ஆனந்த பரவசம் அடைந்து, அவளது பக்கம் திரும்பி, அவளை ஆசையோடு இழுத்துத் தனக்கருகில் உட்காரச் செய்தான். ஆனால் அவன் அப்போதும் வாயைத் திறக்கவில்லை. அவன் பேசாமையால் மேனகாவின் மனம் முன்னிலும் அதிகம் துடித்தது. “ஆகா இன்னமும் கோபமா? இந்தப் பாவியோடு ஒருவார்த்தை சொல்லக்கூடாதா? இவ்வளவு நாழிகை பேசாமலிருந்து என்னைத் தண்டித்தது போதாதா?” என்றாள்.

சாமாவையரும், பெருந்தேவி அம்மாளும் போதித்து போதித்து அவனுடைய மனதை மாற்றி மேனகாவின் மீது நல்லெண்ணத்தையும் அன்பையும் உண்டாக்கியிருந்தனர் ஆதலாலும், கல்லையும் கரையச் செய்யும் தன்மை வாய்ந்த அவளுடைய அன்பு ததும்பிய கடிதத்தைக் கண்டு அவன் கழி விரக்கமும், மனது இளக்கமும் கொண்டிருந்தான் ஆதலாலும், அவன் அவளது விஷயத்தில் தான் பெரிதும் தவறு செய்ததாய் நினைத்து அதற்காக அவளிடம் அன்று மன்னிப்புப் பெறவேண்டு மென்று வந்தவன் ஆதலாலும், அவளுடைய செயலும், சொல்லும் அவனது மனத்தை முற்றிலும் நெகிழச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/68&oldid=1248135" இலிருந்து மீள்விக்கப்பட்டது