பக்கம்:மேனகா 1.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78

மேனகா

பையில் இன்னம் இடமிருக்கிறதே என்று தாந்தோனியப்பர் ஏங்கினார். இலங்கையை ஆண்ட இராவணன் வீட்டில் வாயுபகவான் விசிறி கொண்டு வீசினான்; அக்கினி பகவான் அடுப்பெறித்தார்; சூரிய பகவான் விளக்கேற்றும் வேலை செய்தான்; வருண பகவான் தண்ணீர் குடமெடுத்தான். நவகிரகங்களே ஜாதகம் கணித்தன. அவ்வாறே நமது சிரஸ்ததாரான தாந்தோனி ராயர் வீட்டில் அறந்தாங்கித் தாசில்தார் முறந்தாங்கிப் புடைத்தார். திருவையாற்று போலீஸ்தார் திரிகை பிடித்தறைத்தார். பட்டுக்கோட்டைத் தாசில்தார் கட்டைகளைப் பிளந்தார். மன்னார்குடித் தாசில்தார் வெந்நீர் தயாரித்தார். கும்பகோணம் தாசில்தார் செம்பு தவலை கழுவினார். வலங்கிமான் போலீஸ்தார் பாயைப் பிரித்தார். அந்த ஜில்லாவிலிருந்த எல்லா உத்தியோகஸ்தர்களின் குடுமியும் அவருடைய கையிலிருந்தது. அவர்கள் செய்த நற்காரியங்கள் யாவற்றையும் ராயர் மறந்துவிடுவார். எவனாயினும் அவருடைய கோபத்திற்கு இலக்கானால், ஒரு வாரத்திற்குள் அவனுடைய தலைச்சீட்டு கிழிபட்டுப்போம். தையல் இலையின் கோணலை நிமிர்த்தக் கல்லியந்திரத்தைப் பாரம் வைத்தலைப் போல, அவன் தலையைத் துக்கா வண்ணம், அவனைப் பாதாளத்தில் ஆழ்த்தி அவன் மீது பாரம் வைத்து விடுவார். அத்தகைய உன்னத பதவியான சிரஸ்ததார் வேலையிலிருந்து தஞ்சையின் தாசில்தார் வேலைக்கு வந்தவ ராதலால், தாந்தோனி ராயர் இன்னமும் பழைய மேன்மையை விடாமல் பாராட்டி வந்தார். அதற்கு முன் தமது வீட்டில் தஞ்சையின் தாசில்தார் மஞ்சள் அரைத்ததை மறந்து, தலை கால் தெரியாமல் அதிகாரமும் ஆடம்பரமும் செய்து தாசில் வேலை பார்த்து வந்தார்.

சில வருஷங்களுக்கு முன்னர் பி.ஏ., பி.எல்., முதலிய பாடங்களைப் பெற்ற ஒருவர் தேசத்தில் தாசில்தாராக நியமிக்கப்பட்டார். அவர் மகா புத்திமான். ஆனால், கீழிருந்த சிப்பந்திகளை மிரட்டி இரக்கமற்ற மனதோடு வேலைவாங்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/96&oldid=1251015" இலிருந்து மீள்விக்கப்பட்டது